யம்மியான “சைவ 65” ரெசிபி – குழந்தைகளுக்கான ஈவினிங் ஸ்னாக்ஸ்!!

0

சைவ பிரியர்களுக்கும் சிக்கன் 65 போல எதாவது சாப்பிட வேண்டும் என்பது போல இருக்கும். அதற்காக தான் இன்று மீல்மேக்கரை வைத்து செய்ய கூடிய “சைவ 65” ரெசிபி குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

தேவையான பொருட்கள்

  • மீல் மேக்கர் – 200 கிராம்
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 2 டீஸ்பூன்
  • காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • இஞ்சி & பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  • உப்பு – 2 டீஸ்பூன்
  • மைதா மாவு – 1/4 கப்
  • கடலை மாவு – 1/4 கப்
  • கருவேப்பில்லை – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில், மீல்மேக்கரை எடுத்து கொள்ள வேண்டும். அதில் சூடான தண்ணீரை ஊற்றி அலச வேண்டும். பின், அதனை வடிகட்டி விட்டு அதில் சிறிது குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும். இப்படி செய்ததும் மீல் மேக்கர் உப்பி விடும். பின், அதில் மல்லி தூள், மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

அப்போவே எங்க செல்லம் டாப் தாங்க – முக்கிய பிரபலத்துடன் இருக்கும் குக் வித் கோமாளி ஷிவாங்கி!!

பின், அதில் உப்பு, மைதா மற்றும் கடலை மாவு ஆகியவற்றை சேர்த்து மீல் மேக்கரில் மசாலா படும் வரை நன்றாக பிசைந்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பின், ஒரு சட்டியினை காய வைத்து அதில் எண்ணெய்யை ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், அதில் எடுத்து வைத்துள்ள மீல்மேக்கரை போட்டு பொரிக்கவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நன்றாக பொன்னிறமாக வரும் வரை பார்த்து பொறிக்க வேண்டும். கடைசியாக இதில், கருவேப்பில்லை சேர்க்க வேண்டும். இதனை மாலை நேர ஸ்நாக்ஸ் போல கூட சாப்பிடலாம்.

சுவையான “சைவ 65” ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here