பூவே உனக்காக சீரியல் பூவரசி பற்றி தெரியாத மர்மங்கள் – என்ன பண்ணி இருக்காங்கனு பாருங்களே!!

0

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலின் நாயகி பூவரசி பற்றிய சுவாரசியமான தகவல்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூவே உனக்காக

பூவே உனக்காக சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. கதிர் மற்றும் பூவரசிக்கு இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் பூவரசி தான் தற்போது ரசிகர்களின் கனவுக்கன்னி என்றே சொல்லலாம். இவரது உண்மையான பெயர் ராதிகா ப்ரீத்தி. இவர் தமிழ் பெண் கிடையாது. இவரது சொந்த ஊர் கர்நாடகா தானாம். ஆனாலும் சுலபமாகவே தமிழ் பேசி வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவருக்கு இது தான் முதல் சீரியல் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம் ஆனால் அதுதான் கிடையாது, இவர் கன்னட திரையுலகில் 2 படங்களில் நடித்திருக்கிறாராம். அதுமட்டுமல்ல தமிழிலும் எம்பிரான் என்ற படத்திலும் நடித்துள்ளார். ஒரு கர்நாடக பெண்ணாக இருந்து எப்படி இவ்வளவு எளிதாக தமிழ் பேச முடிகிறது என்பதே குழப்பமாக இருந்தது. அதற்கான விடையை அவரே கூறிவிட்டார். அதாவது அவரது அப்பா தான் கர்நாடகாவாம். ஆனால் அவரது அம்மா தமிழ்நாடு தானாம்.

வீட்டில் இருந்தபடியே முக அழகு பெறுவதற்கான டிப்ஸ் – ட்ரை பண்ணி பாருங்க!!

எனவே தான் அவருக்கு எளிதாக தமிழ் பேச வருமாம். அவர் நடித்த எம்பிரான் படத்தில் அவரது சொந்த குரலில் தான் நடித்திருந்தாராம். பூவராசியின் அந்த கொலுக்மொலுக்கான அழகு தான் பல ரசிகர்களை கவர்ந்ததே. அதன் பிறகு தான் சீரியலில் நடிக்கலாம் என்று பூவே உனக்காக சீரியலுக்கு ஒத்துக்கொண்டாராம். ஆரம்பித்திலேயே இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க தற்போது கதிர், பூவரசி ஜோடி தான் டாப் லிஸ்டில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here