விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4ன் போட்டியாளர், வெற்றியாளர் முகேன் ராவ் தற்போது தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர். நடிகர் முகேன் ராவ் சிறிய வயது புகைப்படங்கள் தற்போது வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
பிக்பாஸ் முகேன் ராவ்
மலேசியாவை சேர்ந்த ஒரு தமிழ் இன்டிபெண்டெண்ட் இசை கலைஞர் தான் இந்த முகேன் ராவ். முகேன் ராவ் இசையில் உருவான ‘அன்பே ஆருயிரே’, ‘கயல்விழி’, ‘அபிராமி’ ஆகிய பாடல்கள் உலக நாடுகளை கடந்து பிரபலமானது. இதன் மூலம் விஜய் டிவியில் 2019ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4ல் வாய்ப்பு கிடைத்து 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார் 24 வயதான முகேன் ராவ்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் அதிகம் பார்வையாளர்களை பெற்ற ஒரே சீசன் முகேன் ராவ் கலந்து கொண்ட சீசன் 4 என்பது அனைவராலும் மறுக்க முடியாத ஒன்று. பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் விரும்பும் போட்டியாளர்களில் ஒருவராக அறியப்பட்ட முகேன் ராவ் அந்த சீஸனின் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.
டைட்டிலுடன் மலேசியா சென்ற இவருக்கு அந்நாட்டு அரசாங்கம் சார்பில் பெரிய வரவேற்புகள் கொடுக்கப்பட்டது. முன்னதாக பெண் ரசிகைகள் அதிகம் கொண்ட முகேன் ராவ் பிக்பாஸ் வீட்டில் ‘சத்தியமா நான் சொல்லுறேன்டி’ என்ற பாடலை எழுதி அந்நிகழ்ச்சியிலேயே அதை பாடியிருந்தார்.
உச்சகட்ட கவர்ச்சியில் தாறுமாறாக போஸ் கொடுத்த அமலா பால் – ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!
பின்பாக முகேன் ராவ் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முன்னதாகவே, இந்த பாடல் மக்கள் மத்தியில் அவ்வளவு பிரபலமானது. தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி முடித்து வந்த கையோடு பல புதிய படங்களில் கமிட்டானார் முகேன் ராவ்.
இவரது நடிப்பில் உருவான ‘வெற்றி’ என்ற திரைப்படம் தற்போது ரிலீசுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில் முகேன் ராவின் சிறிய வயது புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.