ஹெல்தியான “கவுனி அரிசி அல்வா” – குழந்தைகளுக்கான ஸ்வீட் ரெசிபி!!

0

குழந்தைகளுக்கு சிறு தானியங்கள் என்றால் எப்போதுமே பிடிக்காது. அதனை அவர்களுக்கு பிடித்தது போல் செய்து கொடுத்தால் அவர்கள் கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவர். அந்த வகையில் இன்று “கவுனி அரிசி அல்வா” ரெசிபி குறித்து பார்க்கலாம்..!!

தேவையான பொருட்கள்

  • கருப்பு கவுனி அரிசி – 1 கப் (200 மில்லி)
  • தண்ணீர் – 3 கப்
  • சர்க்கரை – 4 தேக்கரண்டி
  • ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
  • நெய் – 3 தேக்கரண்டி
  • கெட்டி தேங்காய் பால் – 1/2 கப்
  • தேங்காய் துருவல் – அரை கப்

செய்முறை

முதலில், கவுனி அரிசியினை முதல் நாள் ராத்திரியே ஊறவைக்க வேண்டும். அரிசியினை குக்கரில் போட்டு 3 விசில்கள் வரை வைக்க வேண்டும். பின்பு, அரிசி நன்றாக வெந்ததும் பதத்தினை பார்த்து விட்டு அரிசியினை நன்றாக மசிக்க வேண்டும். பின், சிறிது நேரம் ஆற வைத்து விட வேண்டும். பின்பு, ஒரு பத்திரத்தினை எடுத்து அதில் அரிசியினை போட்டு அத்துடன், சர்க்கரை சேர்க்க வேண்டும்.

இந்தியாவில் ஒரே நாளில் 47,262 பேருக்கு கொரோனா – மத்திய சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்!!

சிறிது நேரம் கொதித்ததும், அதில் ஏலக்காய் தூள், நெய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். நன்றாக இந்த கலவையினை கிண்டி விட வேண்டும். கடைசியாக, தேங்காய் பாலினை சேர்த்து கிளறி விட்டு, இறக்கி வைக்கும் போது அதில் தேங்காய் துருவலை சேர்க்க வேண்டும். அவ்ளோ தான்!!

யம்மியான “கவுனி அரிசி அல்வா” ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here