தமிழக சட்டமன்ற தேர்தல் எதிரொலி – 18,859 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

0
bus

தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழக மக்கள் பயனடையும் வகையில் தற்போது தமிழக்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. வழக்கத்தை விட இந்த தேர்தல் மிக சவாலானது. காரணம் தேர்தல் நேரத்தில் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகம் எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழக்தில் அதிகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடுமையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வருகின்றனர். மேலும் தேர்தல் அதிகாரிகளும் மிக முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பேருந்துகளிலும் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தலின் போது வாக்களிப்பதற்காக வெளியூரில் பணி புரிபவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வார்கள். இதனை கருத்தில் கொண்டு தற்போது தமிழகத்தில் சுமார் 16,859 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை சுமார் 14,215 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

BUS

யாருப்பா இந்த பிரஷித் கிருஷ்ணா?? இங்கிலாந்தை கதறவிட்ட பந்துவீச்சாளர்!!

இதுபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 2,644 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. மேலும் தேர்தலுக்கு பின்பு சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு திரும்பும் மக்களுக்காக கூடுதலாக 2,115 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. ஊருக்கு செல்வதற்காக பேருந்துகளில் முன்பதிவு செய்வதற்கு www.tnstc.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யவும் அல்லது tnstc official app மூலம் டிக்கெட் முன்பதிவை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பேருந்துகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாய முறையில் பின்பற்ற வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here