‘இப்படி செய்றதெல்லாம் செஞ்சுட்டு வெக்கமில்லாமல் எப்படி நடிக்க முடியுது’ – கண்ணம்மாவை பற்றி பாரதியிடம் ஏத்தி விடும் வெண்பா!!

0

சிறந்த குடும்பங்களுக்கு இடையேயான போட்டியில் என்டர்டைன்மெண்ட் சுற்று நடக்கிறது. அதில் சௌந்தர்யா குடும்பம் வெற்றி பெறுகிறது. இரண்டாம் இடத்தில் ராஜா ராணி சந்தியா மற்றும் சரவணன் உள்ளனர்.

மெகா சங்கமம்

இன்றைய மெகா சங்கமம் எபிசோடில் என்டர்டைன்மெண்ட் சுற்று நடக்கிறது. அதில் சௌந்தர்யா குடும்பத்தில் அகில், அஞ்சலி, சௌந்தர்யா, கண்ணம்மா பங்கு பெறுகிறார்கள். குடிகார கணவராக அகில் நடிக்க, குடிகார கணவனிடம் அடி வாங்கும் பெண்ணாக அஞ்சலி நடித்திருக்கிறார். தாலியை கழற்றி குடிக்க செல்லும் கணவனிடமிருந்து தன்னை காப்பற்றும்படி சௌந்தர்யாவிடம் அஞ்சலி கெஞ்சுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சாமி வேடம் அணிந்த கண்ணம்மாவிடம், சௌந்தர்யா மற்றும் அஞ்சலி வேண்ட, சாமியாக எழுந்து வருகிறார் கண்ணம்மா. குடிகார கணவனான அகிலை கண்ணம்மா மிரட்ட, அஞ்சலிக்கு தாலி கட்டி விடுகிறார் அகில். நிகழ்ச்சி முடிந்ததும் பாரதிக்கு உறைக்கும்படி பேசுகிறார் கண்ணம்மா.

இவர்கள் நடித்த நாடகத்துக்கு பிக்பாஸ் பிரபலங்கள் சோம் மற்றும் ரியோ தங்களது கருத்துக்களை கூறுகின்றனர். போட்டியில் சௌந்தர்யா குடும்பம் வெற்றி பெறுகிறது. போட்டிக்கு அணிந்த உடையில் உடம்பு அறிக்கிறது என சந்தியா கூற மயிலிறகில் மருந்து வைத்து விடுகிறார் சரவணன்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

கண்ணம்மாவும் ஹேமாவும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஹேமாவின் கண்ணுக்கு மை வைத்து, தலை சீவி, மேக்கப் போட்டு விடுகிறார் கண்ணம்மா. பிறகு, ‘இப்படி செய்றதெல்லாம் செஞ்சுட்டு வெக்கமில்லாமல் நடிக்க எப்படி முடியுது’ என்று கண்ணம்மாவை பற்றி பாரதியிடம் ஏத்தி விடுகிறார் வெண்பா.

அடுத்ததாக  கண்ணம்மா ரூமிற்கு வருகிறார். எங்கம்மா போன இவ்வளோ நேரம் என லட்சுமி கேட்க பாப்கார்ன் வாங்க போனேன் என கண்ணம்மா கூறுகிறார். நீ பொய் சொல்ற, எதோ ஓரு விஷயத்தை என்கிட்ட இருந்து மறைக்கிற நீ என லட்சுமி கூறுகிறார்.

ஒரு வழியாக லட்சுமியை சமாளித்து அனுப்புகிறார்கள் துளசியும், கண்ணம்மாவும். லட்சுமியை சௌந்தர்யாவுடன் வளர்க்கலாம் என துளசி கேட்க, கண்ணம்மா கோவப்படுகிறார். இரவு ஆனதும் போட்டியில் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் என சரவணனும் சந்தியாவும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அப்போது அங்கு வரும் கண்ணம்மாவிடம் பேசுகிறார் சந்தியா. போட்டியில் நீங்க சூப்பரா நடிச்சீங்க என சந்தியா கூற, போட்டியில் நீங்க கண்டிப்பா ஜெயிக்கணும் என வாழ்த்து சொல்லுகிறார் கண்ணம்மா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here