இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா பெண்கள் அணிகளுக்கான ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணி DLS முறையில் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்தியா vs தென் ஆப்ரிக்கா:
இந்தியாவிற்கு வந்த தென் ஆப்ரிக்கா பெண்கள் அணி இன்று தங்களது மூன்றாவது ஒரு நாள் போட்டியை விளையாடினர். இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதலில் பேட் செய்த இந்திய பெண்கள் அணி 50 ஓவர்கள் முடிவில் 248 ரன்களை குவித்தனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பூனம் 77 ரன்களை குவித்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
#INDvsENG டி 20 தொடர் – 50% பார்வையாளர்களுக்கு அனுமதி!!
249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி இந்த போட்டியில் மிக சிறப்பாக விளையாடியது. அந்த அணியின் லீ சதம் அடித்து அசத்தினார். இந்த அணி 46.3 ஓவர்களில் 223 ரன்கள் எடுத்த நிலையில் மழை ஆட்டத்தில் குறுக்கிட்டது. மழை தொடர்ந்து நீண்ட நேரமாக நீடித்ததால் இந்த போட்டியை DLS முறையில் முடிக்க நடுவர்கள் முடிவு செய்தனர். அதன்படி DLS முறையில் தென் ஆப்ரிக்கா பெண்கள் அணி இந்த போட்டியை 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று அசத்தியது.