அம்பு மீது நடவடிக்கை எடுத்த அரசு எய்தவர் மீது எடுக்கவில்லை?? பாலியல் வழக்கில் நீதிபதி அதிரடி!!

0
dgp

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அம்பு மீது நடவடிக்கை எடுத்த அரசு அதை எய்தவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

உயர்நீதிமன்றம் கேள்வி

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது பெண் எஸ்பி ஒருவர் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் ஒன்றை அளித்திருந்தார். புகார் அளிக்க சென்ற பெண் எஸ்பியை தடுத்து நிறுத்திய வழக்கில் எஸ்பி கண்ணன் பணிநீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து எஸ்பி கண்ணனுடன் சேர்ந்து மற்ற காவலர்களும் பணி மாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து செங்கல்பட்டு காவல் ஆய்வாளர் மற்றும் 19 காவலர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் டிஜிபி மீதான பாலியல் வழக்கு சென்னை உயர் நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது பேசிய நீதிபதி பெண் எஸ்பியை தடுத்து நிறுத்தியதாக கூறி அவரை பணிநீக்கம் செய்துள்ளீர்கள். புகார் சம்பந்தமாக சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டியவர் சிறப்பு டிஜிபி தான். அம்பு மீது நடவடிக்கை எடுத்த அரசு அதை எய்தவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்.

போர்களை விட கொரோனாவால் தான் அதிக பலி – ஜோ பைடன் வருத்தம்!!

மேலும் 10 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் வலியுறுத்திய போதும், டிஜிபி மீது நடவடிக்கை எடுக்கமுடியாத அளவுக்கு டிஜிபி அதிகாரம் படைத்தவரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கடேஷ், நீதிமன்றம் இந்த வழக்கை உன்னிப்பாய் கவனிக்கும் என கூறி டிஜிபி மீதான விசாரணை அறிக்கையை மார்ச் 16ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here