தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் இன்று ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீமான் மற்றும் பாரதிராஜா சசிகலாவை சந்தித்துள்ளனர்.
சசிகலா:
நான்கு ஆண்டு சிறை தண்டனைக்கு பின்பு சசிகலா இந்த மாதம் தமிழகத்திற்கு வந்தார். அவர் தமிழகத்திற்கு வருகை தந்ததால் பல சர்ச்சைகள் கிளம்பியது. மேலும் சசிகலா மற்றும் தினகரன் இருவரும் சேர்ந்து அதிமுகவை மீட்டெடுக்க முயற்சி செய்து வருகின்றனர். தற்போது இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சசிகலா ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து தனது மரியாதையை செலுத்தினார்.
அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிகலா கூறியதாவது, இந்த தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் மீண்டும் ஒன்றிணைந்து வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க வேண்டும் என்று கூறினார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை திநகர் இல்லத்திற்கு சென்று சசிகலாவை சந்தித்து பேசினார்.
ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் விழா – கேக் வெட்டி, மரக்கன்று நட்டு கொண்டாட்டம்!!
இவரை தொடர்ந்து இயக்குனர் பாரதிராஜாவும் சந்தித்து பேசியுள்ளார். ஏற்கனவே சரத்குமார் மற்றும் ராதிகா சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார்கள். ஆனால் அவர்கள் கூறியதாவது, சசிகலாவின் உடல்நிலையை கேட்டறிந்தோம் என்று கூறினார்கள். தற்போது தமிழகத்தில் தேர்தல் வரும் சூழலில் இந்த சந்திப்பு அனைவரையும் பரபரப்பாக்கியுள்ளது.