நடிகர் வடிவேலுவுக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்கும் மீரா மிதுன் – வைரலாகும் வீடியோ!!

0

நகைச்சுவை நடிகர் வடிவேலு சினிமா வாய்ப்புகள் இல்லாமல் பத்து வருடமாக நடிப்பதை விட்டு ஒதுங்கியிருப்பதாக காணொளி ஒன்றை பதிவிட்டார். அந்த விடியோவை பார்த்த மீரா மிதுன் தான் தயாரிக்க உள்ள படத்தில் வடிவேலு நடிக்குமாரு அழைப்பு விடுத்துள்ளார்.

நடிகை மீரா மிதுன்

திரையுலகில் நகைச்சுவை என்றாலே நாம் எல்லாருக்கும் நினைவுக்கு வருவது நடிகர் வடிவேலுவின் முகம் தான். சினிமாவில் அவர் நடித்துள்ள நகைச்சுவை காட்சிகள் இன்னும் நூறு வருடங்கள் வரை நிலைத்திருக்கும் என்பது நிச்சயமான கருத்தாகும். இவர் நடித்திருக்கும் அனைத்து நகைச்சுவை காட்சிகளும் எல்லா தரப்பினராலும் ரசிக்க கூடியதும், எல்லா காலத்துக்கும் பொருந்த கூடியதாகவும் இருக்கும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ உள்ளிட சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் நகைச்சுவை நடிகர் வடிவேலு. இந்த படத்தில் இயக்குனர் ஷங்கருடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க கூடாது என தடை உண்டானது. அதிலிருந்து கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியிருக்கிறார் வடிவேலு.

‘உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும்’ – சசிகலா உரை!!

நடிகர் வடிவேலு சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘சினிமாவில் 10 வருடங்களாக நடிக்காமல் வீட்டில் இருப்பது ரணமானது. எனது உடம்பில் தெம்பு இருக்கிறது. நடிப்பதற்கும் ஆசை இருக்கிறது. ஆனால் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை’ என பேசிய அவர் வஞ்சத்தில் வீழ்ந்தாயடா என்ற பாடலையும் பாடியுள்ளார்.

இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. நடிகர் வடிவேலுவின் இந்த விடியோவுக்கு சர்ச்சைக்குரிய நடிகையும் மாடலுமான மீரா மிதுன் தற்போது பதில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து மீரா மீதுன் கூறும்போது, ‘நடிகர் வடிவேலுவின் சமீபத்திய விடியோவை பார்த்தேன். வஞ்சத்தில் வீழ்ந்தாயடா என்ற பாடலைப்பாடி கண்கலங்கியுள்ளார்.

‘வெற்றிகரமான மனிதர்களை வஞ்சனை செய்து தான் வீழ்த்துவார்கள். இது என் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட பாடம். உங்கள் தெனாலிராமன் படத்துக்கு நான் பெரிய ரசிகை. நீங்கள் ஒரு பெரிய சகாப்தம். நீங்கள் கண் கலங்கக்கூடாது. நான் சொந்தமாக ஒரு படம் தயாரிக்க உள்ளேன். அந்த படத்தில் உங்களுக்கு விருப்பமிருந்தால் நீங்கள் நடிக்கலாம். நான் பெருமைப்படுவேன்’ என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here