ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் விழா – கேக் வெட்டி, மரக்கன்று நட்டு கொண்டாட்டம்!!

0

இன்று தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அதிமுகவினர் கேக் வெட்டி, மரக்கன்றுகளை நட்டு கொண்டாடினர்.

ஜெயலலிதா:

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு மறைந்தார். அவரது மறைவிற்கு பின்பு தமிழகத்தில் பல சர்ச்சைகள் கிளம்பியது. மேலும் ஆண்டு தோறும் ஜெயலலிதாவின் பிறந்தநாளை அதிமுகவினர் மிக சிறப்பாக கொண்டாடி வருவார்கள். இன்று ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆண்டு முதல் ஜெயலலிதாவின் பிறந்தநாளை அரசு விழாவாகவும் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாகவும் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது இவரது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமையகத்தில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஜெயலலிதாவிற்கு தங்களது மரியாதையை செலுத்தினர். மேலும் பிறந்தநாள் விழாவின் சிறப்பு மலரையும் இவர்கள் இருவரும் சேர்ந்து வெளியிட்டனர். தற்போது அதிமுகவினர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை தடபுடலாக கொண்டாடி வருகின்றனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் சுமார் 73 கிலோ எடை உள்ள கேக்கினை வெட்டி கொண்டாடினர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் – முதல்வர், துணை முதல்வர் மரியாதை!!

இந்த கேக்கினை இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர். இதனை தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது மெழுகு சிலையை திறந்து வைத்தனர். மேலும் அதனுடன் அங்கு அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியம் மற்றும் அறிவுசார் பூங்காவையும் திறந்து வைத்தனர். இதனை தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் திறந்து வைத்தனர். பின்பு சென்னை மெரினா காமராஜர் சாலைக்கு வந்த முதல்வர் பழனிச்சாமி, ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துவக்கி வைத்தார். மேலும் முதல் மரக்கன்றை முதல்வர் நட்டு வைத்து விழாவை சிறப்பித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here