அகமதாபாத் மொதேரா கிரிக்கெட் மைதானம் – நரேந்திர மோடி ஸ்டேடியம் என பெயர் மாற்றம்!!

0

தற்போது இன்னும் சில மணி நேரங்களில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. தற்போது அந்த போட்டி நடைபெறும் மைதானத்தின் பெயரை திடிரென்று மாற்றியுள்ளனர்.

அஹமதாபாத்:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது டெஸ்ட் தொடரை விளையாடி வருகின்றனர். முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னை மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இதில் இரு அணிகளும் தலா 1 முறை தங்களது வெற்றியை பதிவு செய்தனர். தற்போது மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அஹமதுபாத் மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. அதில் மூன்றாவது போட்டி இன்னும் சில மணி நேரங்களில் துவங்க உள்ளது.

இந்த மைதானம் கடந்த 1982ம் ஆண்டு அமைக்கப்பட்டு கடந்த 2015ம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. இந்த மைதானம் உலகிலேயே பெரிய மைதானம் என்னும் புகழை பெற்றுள்ளது. மேலும் இந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் 1,10,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கலாம். அந்த அளவிற்கு இந்த மைதானம் பெரியது. மேலும் தற்போது கொரோனா பரவல் காரணமாக இந்த மைதானத்திற்கு 55,000 ரசிகர்களை மட்டுமே அனுமதி செய்யவுள்ளனர். மேலும் இந்த மைதானத்தில் மழை பெய்தால் கூட தண்ணீரை அதுவாகவே வெளியேற்றும் அம்சத்தை உடையது. அதனால் இங்கு நடக்கும் போட்டி மழையினால் பாதிக்காது.

#INDvsENG பகலிரவு டெஸ்ட் – உத்தேச 11 அணி வீரர்கள் விபரம்!!

மேலும் இந்த மைதானத்தில் நிழல் விழாது அந்த வகையில் அமைப்பை பெற்றுள்ளது. மேலும் இந்த மைதானத்திற்கு சர்தார் படேல் மைதானம் என்று பெயர் வைத்தனர். ஆனால் தற்போது போட்டி துவங்குவதற்கு குறைந்த நேரமே இருக்கும் நிலையில் அதிரடியாக மைதானத்தின் பெயரை மாற்றியுள்ளனர். தற்போது இந்த மைதானத்திற்கு நாட்டின் பிரதமர் பெயரை வைத்துள்ளனர். அதன்படி இந்த மைதானம் இனி நரேந்திர மோடி ஸ்டேடியம் என்று அழைக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here