#INDvsENG பகலிரவு டெஸ்ட் – உத்தேச 11 அணி வீரர்கள் விபரம்!!

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று தங்களது மூன்றாவது டெஸ்ட் போட்டியை விளையாட உள்ளது. தற்போது இந்த இரு அணிகளின் உத்தேச வீரர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியினர் தற்போது முதலாவதாக தங்களது டெஸ்ட் தொடரை விளையாடி வருகின்றனர். மொத்தம் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை 2 போட்டிகள் முடிந்துள்ளது. இதில் இரு அணிகளும் தலா ஒரு முறை தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த இரு அணிகளுக்கான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் துவங்குகிறது. இந்த போட்டி புகழ்பெற்ற அஹமதாபாத் மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

#INDvsENG பகலிரவு டெஸ்ட் – தயார் நிலையில் உலகில் மிகப்பெரிய மைதானம்!!

மேலும் இந்த டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. இந்த மைதானத்தில் மொத்தம் 1,10,000 ரசிகர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து போட்டியை காணலாம். ஆனால் தற்போது கொரோனா விதிமுறைப்படி இந்த போட்டிக்கு 55,000 ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும் இந்த போட்டி மிக முக்கியமானது என்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த இரு அணிகளின் இடம் பெரும் வீரர்களின் உத்தேச பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

உத்தேச இந்திய அணியின் வீரர்கள் பெயர் பட்டியல்:

ரோஹித் சர்மா, சுப்மங் கில் , ரஹானே, புஜாரா, விராட் கோஹ்லி(C), ரிஷாப் பாண்ட்(WK), அக்சர் படேல், அஸ்வின், இஷாந்த் சர்மா, சிராஜ், பும்ராஹ்.

உத்தேச இங்கிலாந்து னையின் வீரர்கள் பெயர் பட்டியல்:

ஜாக் கிராவ்லி, சிப்லே, பேரிஸ்டோ(WK), ரூட்(C), ஸ்டோக்ஸ், ஃபோக்ஸ், ஒல்லி போப், டாம் பெஸ், ஆர்ச்சர், லீச், ஆண்டர்சன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here