பிப்., 24 இதே நாளில் சச்சின் நிகழ்த்திய சாதனை – 11 ஆண்டுகளுக்கு பின்பும் நிலைத்து நிற்கிறது!!

0
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்று அழைக்கப்படுபவர் தான் சச்சின் டெண்டுல்கர். இவர் இதே நாளில் சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகமே திரும்பி பார்க்கும் வகையில் ஓர் சாதனையை செய்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர்:

கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை படைத்து இளம் வீரர்களுக்கு ஓர் முன்னுதாரணமாக திகழ்பவர் தான் சச்சின் டெண்டுல்கர். இவரை கிரிக்கெட் உலகின் கடவுள் என்றும் அழைத்து வருவர். இவர் கிரிக்கெட்டில் 100 சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இவரது சாதனையை இன்னும் எவரும் முறியடிக்கவில்லை. அந்த அளவிற்கு கிரிக்கெட்டில் தனது கால் தடத்தை மிக ஆழமாக பதிய வைத்துள்ளார். இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் இன்னும் ரசிகர்கள் இவரது பெருமையை பேசி வருகிறார்கள்.
இந்த தினத்தில் ஒரு நாள் தொடரில் சச்சின், ரோஹித் உள்ளிட்டோர் இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளனர். அதிலும் ரோஹித் 3 முறை இரட்டை சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார். மேலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இரட்டை சதத்தை துவங்கியதே சச்சின் டெண்டுல்கர் தான். முந்தைய காலத்தில் ஒரு நாள் போட்டியில் தனி மனிதனின் அதிகபட்ச ஸ்கோர் ஆக 194 ரன்கள் தான் நீண்டகாலமாக இருந்தது. இதனை பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் அடித்துள்ளார். ஆனால் அதனை சச்சின் முறியடித்து அசத்தினார்.
இவர் கடந்த 2010ம் ஆண்டு இதே நாளில் தென்ஆப்ரிக்காவிற்கு எதிராக நடந்த போட்டியில் இந்த சாதனையை படைத்தார். அந்த போட்டியில் அவர் 147 பந்துகளை சந்தித்து இரட்டை சதத்தை பதிவு செய்து அசத்தினார். அப்போது அவர் மைதானத்தில் இருந்த போது அந்த அரங்கமே அவரது பெயரை உச்சரித்தது. மேலும் இது குறித்து ரவி சாஸ்திரி கூறியதாவது, ‘இந்த பூமிக்கோளின் முதல் மனிதர் ஒருநாள் தொடரில் முதன்முதலாக கிரிக்கெட் கடவுள் இரட்டை சதத்தை அடித்துவிட்டார்’ என்று கூறினார். 11 ஆண்டுகள் கழித்தும் இன்னும் இவரது புகழ் நிலைத்து இருக்கிறது. இதற்கு காரணம் கிரிக்கெட்டில் அவரது பங்காளிப்பு தான். தற்போது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here