சென்னையில் மாபெரும் புத்தகக் கண்காட்சி – துணை முதல்வர் துவக்கி வைப்பு!!

0

தற்போது கொரோனா காலத்திற்கு பின்பு சென்னையில் புத்தக காட்சி இன்று துவங்க உள்ளது. இதனை தமிழகத்தின் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைக்கிறார்.

புத்தகக் கண்காட்சி

கடந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இதனால் பல நிகழ்வுகள் நடைபெறுவதில் சிக்கல் எழுந்தது. மேலும் கொரோனா வைரஸ் காரணமாக சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி நடைபெறுவதில் தாமதம் ஆனது. ஆனால் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் புத்தக காட்சியை நடத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி இன்று முதல் சென்னையில் 44வது புத்தகக் கண்காட்சி நடத்த உள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை புத்தக விற்பனையாளர்கள் சங்கம் பபாசி அறிவித்துள்ளது. மேலும் இந்த புத்தக காட்சி வரும் மார்ச் மாதம் 9ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். இந்த புத்தகக் கண்காட்சி சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சிஏ மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. மேலும் இந்த புத்தக காட்சியை தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைக்க உள்ளார். இந்த புத்தக காட்சி காலை 11 மணி முதல் மாலை 8 மணி வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் – நாசா வெளியிட்ட வைரல் வீடியோ!!

மேலும் இந்த புத்தகக் கண்காட்சி வருபவர்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்த புத்தகக் கண்காட்சியில் கொரோனாவிற்கு எதிரான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் கடைபிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இங்கு விற்கப்படும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் டிஸ்கவுண்ட் அளிக்கப்படும் என்றும் அறிவித்தனர். தற்போது அங்கு முதன்முறையாக பதிப்பகங்கள், சிற்றிதழ்களுக்கான தனி அலமாரிகள் அரங்குகளில் ஒதுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here