தளபதி 66ல் அட்லீயுடன் இணையும் விஜய்?? வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

0

‘மாஸ்டர்’ படத்தையடுத்து நடிகர் விஜய் நடிக்கும் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார். இந்நிலையில் தளபதி விஜய் நடிக்கவுள்ள 66வது திரைப்படத்தை இயக்குனர் அட்லீ இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. நடிகர் விஜய் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் விமர்சங்கள் ரீதியாகவும் நல்ல பெயரை பெற்றுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது. இந்நிலையில் தளபதி விஜய் நடிக்கும் 65வது படத்தை முருகதாஸ், லோகேஷ் கனகராஜ், சுதா கொங்கரா ஆகியோர் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது.

சட்டமன்ற தேர்தல் எப்போது?? தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை!!

இந்நிலையில் விஜய்யின் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் இன்னும் ஆரம்பமாகவில்லை. இந்நிலையில் நடிகர் விஜய்யின் 66வது படத்திற்கான அறிவிப்புகள் குறித்து வலைதளத்தில் பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இயக்குனர் அட்லீ மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது. தற்போது இயக்குனர் அட்லீ தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்யின் வீடியோ ஒன்றை பதிவிட்டு, ஹார்ட் எமோஜி ஒன்றை குறிப்பிட்டுள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது இயக்குனர் அட்லீ என கூறிவருகின்றனர். முன்னதாக இயக்குனர் அட்லீ, நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here