செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் – நாசா வெளியிட்ட வைரல் வீடியோ!!

0

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக பெர்சவரன்ஸ் ரோவர் என்ற விண்கலம் செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியதை பதிவு செய்து, அதை வெளியிட்டுள்ளது அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம்.

விண்கலம் தரையிறங்கும் காட்சி

நாசா விண்வெளி மையம் கடந்த ஆண்டு ஜூலை 30ம் தேதி செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய பெர்சவரன்ஸ் ரோவர் என்ற விண்கலத்தை அனுப்பியது. 293 மில்லியன் மைல் தொலைவை கடந்து கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பின்பாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ளது பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம். கடந்த 18ம் தேதி பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைந்ததை ஒட்டி நாசா விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக கொண்டாடினார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

செவ்வாய் கிரகத்தில் ஆய்வுப்பணிகளை துவங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம் அங்கு சில புகைப்படங்களை எடுத்துள்ளது. பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்துடன் மிக சிறிய வகை ஹெலிகாப்டர் ஒன்றும் செவ்வாயில் தரையிறக்கப்பட்டுள்ளது. தரையிறங்கிய ஹெலிகாப்டர் பறக்கவிடப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம் தரையிறங்கிய போது எடுக்கப்பட்ட விடியோவை நாசா இணையத்தில் பதிவு செய்துள்ளது.

நீட் நுழைவு தேர்வு கட்டணம் உயர்வு – அதிர்ச்சியில் மாணவர்கள்!!

விண்கலம் தரையிறங்கியபோது கடைசி நிமிடத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில், பாராசூட்டின் உதவியுடன் விண்கலத்தின் வேகம் குறைக்கப்பட்டு பெர்சவரன்ஸ் ரோவரின் சக்கரங்கள் செவ்வாயில் தடம் பதித்து அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. விண்கலம் ஜெசேரா கிரேட்டர் பகுதியில் இறங்கிய போது எழுந்த தூசியினால் அந்த காட்சிகள் மட்டும் தெளிவாக இல்லை. விண்கலத்துடன் இணைக்கப்பட்ட 7 கேமராக்களின் மூலம் இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here