#IndvsAus 3வது டெஸ்ட்டில் தாகூரை தேர்வு செய்யும் பிசிசிஐ – நடராஜன் நிலை?? குழப்பத்தில் ரசிகர்கள்!!

0

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவிற்கு பதில் எந்த வீரர் களமிறங்க போகிறார் என்று அனைவரிடமும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தற்போது இதை பற்றிய புதிய தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 15 பேர் கொண்ட இந்தியா அணியில் தாகூரை சேர்த்துள்ளது பிசிசிஐ. மேலும் நடராஜன் இந்த போட்டியில் கமிறங்குவாரா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளார்கள்.

இந்தியா vs ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய சென்றுள்ள இந்தியா அணி தற்போது டெஸ்ட் தொடர்களை விளையாடி வருகிறது. மொத்தம் 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெறும். தற்போது 2 போட்டிகள் முடிந்துள்ளது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி மகத்தான வெற்றியை பதிவு செய்து அசத்தியது. அதன் பின் இரண்டவது டெஸ்டில் கோஹ்லி இல்லாத நிலையில் ரஹானே அணியை வழி நடத்தினர். ரஹானே கேப்டன்சி மிகவும் சிறப்பாக இருந்தது. மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை இந்தியா அணி மிகவும் எளிதாக வென்று அசதியுள்ளது. இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான 3 வது டெஸ்ட் போட்டி வரும் 7ம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டி சிட்னியில் வைத்து நடைபெறும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதிசெய்துள்ளது. மேலும் 3 வது போட்டியில் இந்தியா அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சேரவுள்ளார் என்பது அணிக்கு பலமான ஒன்று. ஆனால் தற்போது உமேஷ் யாதவ் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ளார். இரண்டாவது போட்டியின் பொது ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக போட்டியின் நடுவே பெவிலியன் திரும்பினார்.

7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொடூர கொலை – மரண தண்டனை வழங்கிய நீதிமன்றம்!!

ஏற்கனவே ஷமி காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் அறிமுக வீரராக சிராஜ் களமிறக்கப்பட்டார். தற்போது உமேஷ் யாதேவிற்கு பதில் நடராஜன் களமிறக்கப்படலாம் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பிசிசிஐ ஓர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் 15 பேர் கொண்ட இந்தியா அணியில் சரத்துள் தாகூர் மற்றும் நடராஜனின் பெயரை அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். பும்ராஹ் மற்றும் சிராஜ் 3 வது போட்டியில் விளையாட போவது உறுதி. தற்போது உமேஷ் யாதேவிற்கு பதில் நடராஜன், தாகூர் அல்லது சைனி இந்த மூவரில் யார் விளையாட போகிறார் என்பது கேள்விக்குறியானது? மேலும் இதை பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here