Tuesday, May 7, 2024

‘அரசிலுக்கு வந்து நீங்க கஷ்டப்பட வேண்டாம் அங்கிள்’ – ரஜினிகாந்த் குறித்து வனிதா ட்வீட்!!

Must Read

பிக் பாஸ் புகழ் வனிதா விஜயகுமார் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், ரஜினி அங்கிள் நீங்கள் விரைவில் குணமடைந்து வர வேண்டும், அதுமட்டுமல்லாமல் நீங்கள் அரசியலுக்கு வந்து கஷ்டப்பட வேண்டாம் என்று தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் உடல்நலம்:

“அண்ணாத்த” படப்பிடிப்புக்காக ஹைதெராபாத்துக்கு சென்றுள்ளார், ரஜினிகாந்த். படப்பிடிப்பில் கலந்து கொண்ட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்று ரிசல்ட் வந்துள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஆனால் தற்போது அவருக்கு ஏற்பட்ட ரத்த அழுத்த பிரச்சனையால் அவர் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை அறிவித்துள்ளது. தற்போது மூத்த தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அவரது உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

வனிதா விஜயகுமார் ட்வீட்:

இந்நிலையில் பிக் பாஸ் புகழ் வனிதா விஜயகுமார் தனது கருத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “ரஜினி அங்கிள் நீங்க சீக்கிரமாக உடல் நலமுடன் வரவேண்டும், மேலும் இந்த ஆண்டு முடிய கொஞ்சம் நாட்களே உள்ள நிலையில் அடுத்த ஆண்டு சிறப்பாக தொடங்கும்”

குட்டை பாவாடையில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த நயன்தாரா – வைரலாகும் போட்டோஸ்!!

“நீங்கள் அரசியலுக்கு வந்து கஷ்டப்பட வேண்டாம். நீங்கள் உடல் நிலை சீரோடு அதிக நாட்கள் இருந்தாலே போதும்” என்று வனிதா விஜயகுமார் தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் ரஜினிகாந்தின் ரசிகர்கள் அனைவரும் அவர் சீக்கிரமாக நலம் பெறவேண்டும் என்று தங்களது பிராத்தனையை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

நான் யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. சமந்தா கொடுத்த பதிலடி.. முழு விவரம் உள்ளே!!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -