வடிவேல் பாலாஜியை மீண்டும் கௌரவித்த விஜய் டிவி – கண்கலங்கிய ரசிகர்கள்!!

0

இந்த வருடம் ஆரம்பித்த நாளில் தொடர்ந்து பல உயிரிழப்புகளை சந்தித்து வருகிறோம். குறிப்பாக திரையுலக பிரபலங்களின் மரணம் ரசிகர்களை வெகுவாக பாதித்துள்ளது. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் பிரபலம் வடிவேல் பாலாஜியின் இறப்பு இதுவரையிலும் யாராலுமே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இந்நிலையில் அவரை கௌரவிக்கும் வகையில் விஜய் டிவி அவரது முகம் பதித்த அவார்ட் ஒன்றை உருவாக்கியுள்ளது.

வடிவேல் பாலாஜி

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை கைப்பற்றியவர் வடிவேல் பாலாஜி. இதன் பிறகு அவர் பல படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியிலும் பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களையும் மகிழ்வித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

vadivel balaji
vadivel balaji

கடைசியாக அவர் Mr and Mrs சின்னத்திரை 2விலும் கலந்து கொண்டார். இடையிலேயே அந்த நிகழ்ச்சியில் இருந்தும் விலகினார். ஏற்கனவே ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் மயங்கி விழுந்ததை அடுத்து அவருக்கு ஸ்ட்ரோக் இருந்ததாக சொல்லப்பட்டது.

அதன் பிறகு கை கால்கள் செயலிழந்த நிலையில் செப்டம்பர் மாதம் உயிரிழந்தார். இது பலரையும் வேதனைக்குள்ளாக்கியது. கடைசியாக நிகழ்ச்சியில் பார்த்தபோது கூட நன்றாக இருந்த மனிதன் திடீரென இப்படி இறந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. விஜய் டிவியிலும் வடிவேல் பாலாஜி இறந்ததர்க்கு இரங்கல் நிகழ்ச்சியும் ஒளிபரப்பானது.

‘ஜீவா வீட்டை விட்டு போனதுக்கு முழு காரணமும் நீங்க தான்’ – ஜனார்த்தனனை விளாசும் மீனா!!

நடிகர் சிவகார்த்திகேயன் வடிவேல் பாலாஜி பிள்ளைகளின் படிப்பு செலவை தான் பார்த்துக் கொள்வதாகவும் சொல்லி இருந்தார். நடிகர் விஜய் சேதுபதியும் அவரின் குடும்பத்திற்கு தேவையான பண உதவிகளையும் செய்தார். தற்போது விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நடக்கவுள்ளது.

வடிவேல் பாலாஜியும் அந்த நிகழ்ச்சியில் இருந்து வந்ததால் அவரை கௌரவிக்கும் வகையில் அவரின் முகம் பதித்த அவார்ட் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் யோகி பாபு, ரோபோ ஷங்கர் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. பலரும் இதனை பார்த்து கண்கலங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here