இந்த வருடம் ஆரம்பித்த நாளில் இருந்து பல பிரச்சனைகளை நாம் சந்தித்து வருகிறோம் என்றே சொல்லலாம். மேலும் பல உயிர்களை இழந்து வருகிறோம். இந்நிலையில் பிரபல நடிகையான நிகிதாவின் தந்தை பவித்ரன் கொரோனவால் இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் இதற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல நடிகையின் தந்தை மரணம்:
இந்த 2020 ஆரம்பித்த காலத்தில் இருந்து மக்கள் அனைவரும் படாத பாடு கிடையாது. சீனாவில் இருந்து பல நாடுகளுக்கு இந்த கொடிய நோயான கொரோனா காட்டுத்தீ போல பரவியது. அமெரிக்காவில் தான் இந்த நோயின் தாக்கம் அதிகம் என்றே சொல்லலாம். ஆனால் இந்தியா நோய் பாதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதற்கு என்ன தான் தீர்வு என பல நாடுகளும் கதறி வருகிறது. இதுவரையிலும் மருந்துகள் எதுவும் கண்டறியப்படாத நிலையில் அந்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
நோய் எதிர்ப்பு சக்திகள் குறைவாக இருப்பவர்களுக்கே இந்த நோய் அதிகமாக தாக்கியும் விடுகிறது. குறிப்பாக 50 வயதை கடந்தவர்கள் தான் நோய் தாக்குகிறது. பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் இந்த நோயால் உயிரிழந்த சம்பவமும் நடந்தது.
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நிகிதா விமல். இவர் தமிழில் வெற்றிவேல், கிடாரி, கார்த்தியுடன் தம்பி போன்ற படங்களில் நடித்தவர். மேலும் தெலுங்கிலும் பல படங்களில் நடித்தும் வருகிறார். இவரின் தந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த செய்தி பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
மிடுக்கான உடையில் மஜாவாக போஸ் கொடுத்த சமந்தா!!
இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தேசிய துணை செயலாளராகவும், மாவட்ட செயலாளராகவும் இருந்தவர். இவரின் இழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.