தற்போது எங்கு சென்றாலும் கண்ணம்மாவின் பேச்சு தான் எல்லா இடத்திலும் உள்ளது. அதாங்க, பாரதி கண்ணம்மா. இப்பொழுது இந்த சீரியலை பார்க்காதவர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த சீரியலில் புடவையில் அடக்க ஒடுக்கமாக வரும் கண்ணம்மா என்ற ரோஷினி படு ஸ்டைலாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கண்ணம்மாவா இது?? என பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.
ரோஷினி
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது நாயகியாக நடித்து வருபவர் தான் ரோஷினி. இவர் மாடலிங் மூலம் அறிமுகமானவர். பல ஸ்டேஜ் ஷோவிலும் கலந்து கொண்டுள்ளார். ஆனாலும் இவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. பாரதி கண்ணம்மா இவருக்கு ஏற்ற ஒரு கதை என்பதால் அதில் கமிட் ஆனார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆனால் ஆரம்பத்தில் இவருக்கு அவ்வளவாக வரவேற்பும் இல்லை. ஆனால் நாள் ஆக இவருக்கும் ரசிகர்கள் உருவாகினர். பாரதியை திருமணம் செய்ததில் இருந்து இவரின் அந்த அப்பாவியான நடிப்பு மக்களுக்கு பிடித்துப்போனது என்றே சொல்லலாம்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
அதன் பிறகு பாரதிக்கும் கண்ணம்மாவிற்கு இடையே வந்த காதல் காட்சிகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பாரதி கண்ணம்மாவை போல தம்பதிகள் உண்டா?? என்று அனைவரும் பொறாமைப்படும் அளவிற்கு இவர்களின் ஜோடி பொருத்தம் இருந்தது.
இப்படி இருந்த இவர்களின் வாழ்க்கையில் வெண்பா இடையில் புகுந்து தற்போது இவருக்கும், பாரதிக்கும் பிரிவை ஏற்படுத்தினார். பாரதி கண்ணம்மா எப்பொழுது சேருவார்கள் என்று மக்கள் பலரும் ஆவலுடன் காத்துகொண்டுள்ளனர்.
இப்பொழுது திரையில் அடக்க ஒடுக்கமான கண்ணம்மாவை பார்த்த நமக்கு பெரும் அதிர்ச்சியாக நிஜ வாழ்கை கண்ணம்மாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. சீரியலில் புடவையில் குடும்ப பாங்காக காட்சியளித்த கண்ணம்மா நிஜத்தில் ஜீன்ஸில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பலரும் கண்ணம்மாவா இது?? என்று அதிர்ச்சியில் உள்ளனர்.