Sunday, May 5, 2024

சென்னையில் உயரும் கடல் மட்டம் – பல பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம்!!

Must Read

பருவநிலை மாற்றம் மற்றும் பல காரணங்களால் சென்னை மாநகரம் பெரும் அபாயத்தை சந்திக்க உள்ளது. கடலை ஒட்டியுள்ள பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

பல மாற்றங்கள்:

வாகனங்களின் நெருக்கம், தொழிற்சாலைகள் அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் காற்றில் மாசுபாடு கலக்கின்றது. இதில் கூடுதலாக பருவநிலை மாற்றமும் ஏற்படுகிறது. இதன் காரணமாக நாளுக்கு நாள் கடலின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகின்றது. நீர் மட்டம் உயர்வதால் கடலுக்கு அருகே உள்ள குடியிருப்பு பகுதிகள் எப்போது வேண்டுமானாலும் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

கடலோர பகுதிகள் குறித்து ஆய்வு நடத்தும் தேசிய மையம் (என்சிசிஆர்) சமீபத்தில் ஆய்வு ஒன்று மேற்கொண்டது. அதில் தான் இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னை துறைமுகத்தில் இருந்து நீலாங்கரை வரை 21.48 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கடலில் மூழ்கும் அபாயம்:

அதில் பருவநிலை மாற்றம் காரணமாக அடுத்த 5 ஆண்டுகளில் கடல் நீட் மட்டம் 7 சென்டிமீட்டர் வரை உயரும். அதனால், சென்னை கடற்கரைக்கு அருகே 100 மீட்டர் தொலைவு அமைந்துள்ள நிலப்பகுதிகள் கடலில் மூழ்கிவிடும். அடுத்த 80 ஆண்டுகளில் அதாவது 2100 ஆம் ஆண்டு சென்னை கடற்கரையினை அடுத்த ஒரு கிலோமீட்டர் தொலைவு கொண்ட பகுதிகள் கடலில் மூழ்கிவிடும்.

வருங்கால வைப்பு நிதி (PF) பேலன்ஸ் தெரிந்து கொள்வது எப்படி?? எளிய வழிமுறைகள் இதோ!!

இவ்வாறாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எதிர்காலத்தில் நீலாங்கரை மற்றும் அடையாறு முகத்துவார குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கிவிடும் என்று சொல்லப்படுகிறது. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -