வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – இன்று டெல்லியுடன் மோதல்!!

0

ஐபிஎல் 2020 தொடரின் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. மாலை 3 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இரவு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பிளேஆப் சுற்றுக்குள் நுழைய இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

டெல்லி கேபிட்டல்ஸ் எப்படி??

நடப்பு ஐபிஎல் தொடரில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள டெல்லி கேபிட்டல்ஸ் அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இளம் வீரர்கள் நிறைந்த டீம் பேட்டிங், பவுலிங் என இரு பிரிவிலும் அசுர பலத்துடன் உள்ளது. பந்துவீச்சில் குறிப்பாக காகிசோ ரபாடா மற்றும் அன்ரிச் நார்ட்ஜே இருவரும் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கின்றனர்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

இனிவரும் போட்டிகள் மிக முக்கியமானவை என்பதால், ஷிகர் தவான், அஜிங்க்யா ரஹானே மற்றும் பிருத்வி ஷா போன்ற அதிரடி வீரர்கள் பார்மில் நீடிக்க வேண்டியது அவசியம். ஷார்ஜா மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளதால் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு அதிக வெற்றி வாய்ப்புகள் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் எப்படி??

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளுக்கு பிறகு பேட்டிங் பிரிவில் சில மாற்றங்களை செய்துள்ளனர். இதில் சாம் கரண் ஓப்பனிங் வீரராக களமிறங்குவார். அம்பதி ராயுடு மற்றும் ஷேன் வாட்சன் ஆகிய இருவருமே ஹைதெராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் பார்முக்கு வந்துள்ளது அணிக்கு நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இருப்பினும் பவுலிங்கில் சில மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம்.

csk
csk

ஐபிஎல் 2020 இல் இரு அணிகளும் ஏற்கனவே மோதிய போட்டியில் சென்னையை 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வீழ்த்தியது. அதே உற்சாகத்துடன் டெல்லி அணி வீரர்கள் களமிறங்க உள்ளதால், சென்னை கேப்டன் தோனி அணியில் சில மாற்றங்களை கொண்டு வர வாய்ப்புள்ளது.

உத்தேச 11 அணி:

டெல்லி கேபிட்டல்ஸ்: ஷிகர் தவான், பிருத்வி ஷா, அஜிங்க்யா ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் / ரிஷாப் பந்த், அலெக்ஸ் கேரி / ஷிம்ரான் ஹெட்மியர், மார்கஸ் ஸ்டோயினிஸ், ஆக்சர் படேல், ரவி அஸ்வின், அன்ரிச் நார்ட்ஜே, காகிசோ ரபாடா மற்றும் துஷார் தேஷ்பாண்டே

சென்னை சூப்பர் கிங்ஸ்: சாம் கரண், ஃபாஃப் டு பிளெசிஸ், ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, எம்.எஸ். தோனி, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, தீபக் சாஹர், பியூஷ் சாவ்லா, கர்ன் சர்மா மற்றும் ஷார்துல் தாக்கூர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here