Friday, March 29, 2024

வருங்கால வைப்பு நிதி (PF) பேலன்ஸ் தெரிந்து கொள்வது எப்படி?? எளிய வழிமுறைகள் இதோ!!

Must Read

தொழிலாளர் வைப்பு நிதி என்று சொல்லப்படும் பிஎஃப் பணம் எவ்வளவு உள்ளது, அதனை எவ்வாறு சரிபார்த்து கொள்ளலாம் என்று பலருக்கும் குழப்பம் இருக்கும். சிலருக்கு தெரியாமலும் இருக்கலாம். ஒருவரின் பிஎஃப் பணத்தின் விவரத்தை பற்றி எளிமையான முறைகளில் தெரிந்து கொள்ளலாம்.

பிஎஃப் பணம்:

தொழிலாளர் வைப்பு நிதி என்பது அரசாளும் தொழில் நிறுவனத்தாலும் ஒருவரின் சம்பள பணத்தில் இருந்து பிடிக்கப்படும் பணம் தான், பிஎஃப் பணம் என்று சொல்லப்படுகிறது. நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் எதிர்கால நலன் கருதியும் பெரும்பாலான நிறுவனங்களில் இந்த திட்டம் பின்பற்றப்பட்டு வருகின்றது. ஒருவர் வாங்கும் சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

அந்த தொகையினை தேவைப்படும் காலத்தில் அல்லது ஓய்வு காலத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். தொழிலாளர்களின் மிக சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. ஆனால், இந்த பிஎஃப் பணத்தில் தற்போது எவ்வளவு உள்ளது என்று பார்க்க பலருக்கும் தெரியாது. பிஎஃப் பணத்தின் பேலன்ஸ் பற்றி 4 எளிய வழிமுறைகள் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

எப்படி பார்க்கலாம்??

எஸ்எம்எஸ் மூலமாக தெரிந்து கொள்ளலாம்:

உங்களது பிஎஃப் கணக்குடன் பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து தெரிந்து கொள்ளலாம். உங்களுது மொபைலில் 7738299899 என்ற எண்ணிற்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். இந்த வசதி ஆங்கிலம், தமிழ் உள்பட 10 மொழிகளில் கிடைக்கிறது. EPFOHO UAN LAN என்று எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும் இதில் LAN என்பது நாம் தேர்வு செய்யும் மொழியினை குறிக்கும்.

அதனால் அந்த இடத்தில் TAM என்று டைப் செய்து கொள்ளுங்கள். இப்படி செய்தால் உங்களது பிஎஃப் பாலன்ஸ், கடைசியாக வரவு செய்யப்பட்ட தொகை போன்ற விவரங்கள் கிடைக்கும்.

வலைத்தளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்:

வைப்பு நிதியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.epfindia.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று For Employees என்ற சேவையினை கிளிக் செய்ய வேண்டும். அதில் சர்விஸ் என்ற வசதியை கிளிக் செய்து உங்கள் பிஎஃப் எண்ணை குறிப்பிட்டு பாலன்ஸ் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

மொபைல் செயலி:

வருங்கால வைப்பு நிதி வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஒரு மொபைல் செயலியினை அறிமுகப்படுத்தி உள்ளது.

அதனை தரவிறக்கம் செய்து கொண்டு உங்கள் பாலன்ஸ் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம். அந்த செயலியின் பெயர் உமாங்.

மிஸ்ட் கால் மூலமாக:

இன்னொரு முறையாக மிஸ்ட் கால் மூலமாக பாலன்ஸ் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம். 011-22901406 என்ற கட்டணமில்லா எண்ணை பயன்படுத்தி மிஸ்ட் கால் விடுத்தால் பிஎஃப் பாலன்ஸ் குறித்த விவரங்கள் நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

கடைசி ஓவர் திரில்லர்.. 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ராஜஸ்தான்…, தோல்வியின் பிடியில் டெல்லி!!

IPL தொடரின் 17வது சீசன் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -