Wednesday, May 29, 2024

“மக்கள் நீதி மையத்தின்” முதல்வர் வேட்பாளராக கமல் தேர்வு– கட்சி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு!!

Must Read

தமிழகத்தில் அடுத்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கான முனைப்பான பணிகள் தற்போது துவங்கியுள்ள நிலையில் மக்கள் நீதி மையத்தின் முதல்வர் வேட்பாளராக நடிகர் கமல் ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மக்கள் நீதி மையம்:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் 2021 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான அனைத்து பணிகளிலும் அனைத்து கட்சிகளும் இறங்கியுள்ளன. பெரும்பாலான கட்சிகள் தங்களது கட்சியின் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளது. தமிழ் சினிமா துறையின் முன்னணி நடிகரான கமல் ஹாசன் இன்று தனது “மக்கள் நீதி மையம்” கட்சியின் முதல்வர் வேட்பாளராக கட்சி சார்பில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

இன்று சென்னை பாண்டி பஜாரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அனைத்து கட்சி மாநில நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் அறிக்கை பற்றிய விவரங்களும் விவாதிக்கப்பட்டன. அதே போல் வேட்பாளர்கள் குறித்தும் விவாதம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு அந்த கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

முதல்வர் வேட்பாளர்:

அதில் கூறப்பட்டதாவது,”மக்கள் நீதி மையத்தின் முதல்வர் வேட்பாளராக நடிகர் கமல் ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியிடுவதா? அல்லது கூட்டணி கட்சிகளோடு போட்டியிடுவதா? என்றும் வேட்பாளர்களை இறுதி செய்தல், கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தலில் போட்டியிடுவது, போன்ற விவாதங்கள் நடைபெற்றது” இவ்வாறாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பரான ‘க்ரீன் சிக்கன் கபாப்’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

வரும் தேர்தலில் வெற்றி அடைய வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. இந்த அறிக்கையினை கட்சியின் துணைத்தலைவர் மஹேந்திரன் வெளியிட்டார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC பொது தமிழ் ஆறாம் வகுப்பு இலக்கிய கேள்விகள்

https://www.youtube.com/watch?v=4-LlWFlOUuk  Enewz Tamil இன்ஸ்டாகிராம் TNPSC குரூப் 4 தேர்வர்களே.., ஹால் டிக்கெட் ரிலீஸ்.., அதிகாரபூர்வ  அறிவிப்பு!!!
- Advertisement -

More Articles Like This

- Advertisement -