Thursday, May 9, 2024

புதிதாக பரவும் “கேட் கியூ” வைரஸ் – பீதியில் மக்கள்!!

Must Read

கொரோனா நோய் பரவல் இன்னும் குறையாத நிலையில் சீன நாட்டில் இருந்து மேலும் ஒரு வைரஸ் தொற்று பரவி வருவதாக புனே வைராலஜி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த நோய் மூன்று விதமான கொசுக்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்:

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா என்ற வைரஸ் தொற்று பரவியது. இது வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக கூறப்பட்டது. தற்போது வரை உலகில் உள்ள 213 நாடுகள் இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பா?? முதல்வர் இன்று ஆலோசனை!!

cat que virus
cat que virus

உலகில் தற்போது உள்ள நிலவரப்படி 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் இந்த நோய் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை.

புதிய வகை வைரஸ்:

நோய் தொற்று தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்படி மக்கள் அனைவரும் அச்சம் அடைந்துள்ள நிலையில் சீன நாட்டில் இருந்து மேலும் ஒரு வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் மூன்று விதமான கொசுக்களிடம் இருந்தும், பன்றி மற்றும் மைனா போன்ற சிறிய வகை பறவைகளிடம் இருந்து பரவுகின்றது என்று புனே வைராலஜி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நோய் தொற்றின் பெயர் “கேட் கியூ” என்று கூறப்படுகிறது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் இருந்தும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. 833 ரத்த மாதிரிகளில் கர்நாடகாவை சேர்ந்த இருவருக்கு இந்த நோய் தொற்றுக்கான ஆன்டிபாடிஸ் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சமுகப்பரவல் அச்சம்:

இது இந்தியாவில் பொது சமுக பரவலாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நோய் தொற்று தற்போது சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது. கொரோனா குறித்த பயம் இன்னும் நீங்காத நிலையில் தற்போது மேலும் ஒரு நோய் தொற்று பரவுவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை நாட்களின் போது மக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை வழங்குவது வழக்கம். அந்த வகையில் இப்போது நாளை மே...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -