Wednesday, May 15, 2024

மத்திய அரசு துறைகளில் 90 சதவீத இடத்தை தமிழக பட்டதாரிகளுக்கு ஒதுக்குங்கள் – திருச்சி சிவா கோரிக்கை!!

Must Read

இன்று நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தில் திமுக கட்சி எம்.பியான திருச்சி சிவா தமிழகத்தை சேர்ந்த உள்ளூர் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு பணியிடங்களில் 90 சதவீதத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்தவர்கள்:

மத்திய அரசு பணி இடங்களை நிரப்புவது தான் எஸ்.எஸ்.சி அமைப்பின் வேலை. தமிழகத்தைச் சேர்ந்த 80 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பு மையங்களில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், அண்மையில் நடந்த மத்திய அரசு தேர்வுகளில் தமிழகத்தை சேர்ந்த 197 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

இதனை அடுத்து அனைத்து கட்சி தலைவர்களும் இதற்காக போராடினர். தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் நடைபெறுவதால் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக தேர்ச்சி அடைகின்றனர் என்று தேர்வு எழுதியவர்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

திருச்சி சிவா வேண்டுகோள்:

இதனை அடுத்து இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் திமுக கட்சியின் எம்.பி திருச்சி சிவா பேசினார். அவர் கூறியதாவது “மத்திய அரசு பணிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக புறக்கணிக்கப்படுகிறார்கள். மத்திய அரசு துறைகளில் தமிழகத்தை சேர்ந்த மிக சிலரே பணியாற்றுகின்றனர்.”

நாளைய போட்டிக்காக “மாஸ்டர் பிளான்” தீட்டும் “தல” தோனி – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

“மாநிலங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் வகையில் 90 சதவீத இடங்களை உள்ளூர் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு ஒதுக்க வழிவகை செய்ய வேண்டும். தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கும் சம வாய்ப்புகள் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.” என்று கோரிக்கை வைத்தார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..,  போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!

தமிழக போக்குவரத்து கழகம் பயணிகளின் வசதிக்காக பல்வேறு சிறப்பு அம்சங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் வார விடுமுறையை முன்னிட்டு ஒவ்வொரு வாரமும் சிறப்பு பேருந்துகள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -