பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர வேண்டுமா?? உமா மஹேஸ்வரர் விரதம்!!

0
uma maheshwarar
uma maheshwarar

இந்த காலகட்டத்தில் தம்பதிகளிடம் ஈகோ பிரச்சனை தலைதூக்கி உள்ளது. அதில் பல விவாகரத்து வரை கொண்டு செல்கிறது. இதற்கு முக்கிய காரணமே விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாதது தான். பிரிந்த தம்பதியர்கள் ‘உமா மஹேஸ்வரர் விரதம்’ இருந்து வந்தால் கண்டிப்பாக ஒன்று சேர்வார்கள் என சாஸ்திரம் கூறுகிறது.

உமா மஹேஸ்வரர் விரதம்

‘சக்தி இல்லையேல் சிவம் இல்லை, சிவம் இல்லையேல் சக்தி இல்லை’ என்று கூறுவார்கள். அந்த சிவனும், சக்தியும் இணைந்திருக்கும் வடிவமே உமா மஹேஸ்வரர். சிவனும், பார்வதியும் ஒன்றிணைந்து இந்த வடிவத்தில் தோற்றமளிப்பார்கள்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

Uma-Maheswara
Uma-Maheswara

அவர்களை நினைத்து வழிபடுவது தான் ‘உமா மஹேஸ்வரர் விரதம்’. தம்பதியர்கள் ஒற்றுமை பெற, பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. துர்வாச முனிவர் சாபத்தால் மகா விஷ்ணு லக்ஷ்மியை பிரிந்தார். இதனால் மகா விஷ்ணு உமா மஹேஸ்வர விரதம் இருந்ததாக புராணம் கூறுகிறது.

வழிபடும் முறை

பாசுபத விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், சோமவார விரதம், பிரதோஷ விரதம், அஷ்டமி விரதம், கேதார கவுரி விரதம், உமா மகேஸ்வர விரதம் என எட்டு வகையான விரதங்கள் சிவனுக்கு இருக்கின்றன. அதில் உமா மகேஸ்வர விரதம் கடைபிடித்தாலே மற்ற விரதங்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

uma maheshwarar
uma maheshwarar

உமா மஹேஸ்வர உருவ படத்தை வைத்தே இந்த விரதத்தை தொடங்க வேண்டும். இதில் முக்கியான ஒன்று இந்த விரதத்தை கடைபிடித்தால் 16 வருடங்கள் வரை தொடர்ந்து இருக்க வேண்டும். சிவனுக்கு உகந்த நாள் அன்று இந்த விரதத்தை தொடங்க வேண்டும். முதல் வருடம் இந்த விரதத்தை தொடங்கும் போது அதிரசம் படைத்து வணங்க வேண்டும். மற்ற வருடங்களில் உங்களுக்கு விருப்பமான இனிப்பு பதார்த்தங்களை வைத்து வழிபடலாம்.

Uma-Maheswara
Uma-Maheswara

பூஜை செய்யும் நாளில் வீட்டை சுத்தமாகவும், காலையில் சீக்கிரம் எழுந்து குளித்து முடித்து இறைவனை வழிபட வேண்டும். பூஜை முடிந்ததும் சிவனடியாருக்கு அல்லது விருந்தினருக்கு உணவு படைத்த பிறகே விரதமிருப்பவர் சாப்பிட வேண்டும். உமா மஹேஸ்வரரின் உருவ படத்தை வைத்து வழிபடும்போது 16 வருடங்களுக்கு பிறகு அதனை எதாவது ஒரு சிவன் கோவிலில் சேர்த்து விட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here