இனி கட்டணமில்லாமல் ஐபிஎல் தொடரை நேரலையில் பார்க்க முடியாது – டிஸ்னி + ஹாட்ஸ்டார் புதிய திட்டம்!!

0
ipl-hotstar
ipl-hotstar

இந்தியாவில் அதிகப்படியாக பார்க்கும் நிகழ்ச்சியான ஐபிஎல் தொடரை போகும் இடமெல்லாம் பார்த்து ராசிக்கலாம் என்று இருந்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது 2020 ஐபிஎல் தொடரை கட்டணம் இல்லாமல் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் பார்க்க முடியாது.

ஐபிஎல் தொடர்

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொலைக்காட்சியிலும் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டாரிலும் வெளியானது. டிவியில் கண்டுகளிக்க கேபிள் கட்டணமும், டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் இணைய வசதியும் இருந்தால் போதும். இவ்வாறு மக்கள் அனைவரும் ஐபிஎல் தொடரை கண்டுகளித்தனர்.

hotstar
hotstar

கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு (2020) கான ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்புக்கு நடுவே தகுந்த முன்னெச்சரிக்கைகளுடன் ஐபிஎல் தொடர் நடக்கவுள்ளது. ஐபிஎல் தொடரை தொலைக்காட்சியில் இலவசமாக பார்க்கலாம். ஆனால் ஸ்மார்ட் போனில் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் இலவசமாக பார்க்க முடியாது. அதாவது டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் விஐபி ஆண்டு திட்டமான ரூ 399 மற்றும் பிரீமியர் திட்டமான ரூ 1499 சந்தா கட்டி இருந்தால் மட்டுமே ஐபிஎல் தொடரை காண இயலும்.

airtel-and-jio
airtel-and-jio

இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இதற்கு சில எளிய வழிகளை ஹாட்ஸ்டார் வழங்கியுள்ளது. ஏர்டெல் ஜியோவுடன் இணைந்து ஆண்டு சந்தாதாரராக மாற முடியும். அதாவது நீங்கள் ஜியோ அல்லது ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்தால் குறிப்பிட்ட தொலைபேசி திட்டங்கள் மூலம் ஐபிஎல் தொடரை நேரலையில் காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here