110 கோடி ரூபாய் வரை கிசான் திட்டத்தில் முறைகேடு – 80 பேர் பணிநீக்கம்!!

0

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள கிசான் திட்ட முறைகேடு குறித்து வேளாண் முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட யாரும் தப்ப முடியாது எனவும் அவர் எச்சரித்தார்.

கிசான் திட்ட முறைகேடு:

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சார்பில் கிசான் திட்டத்தின் மூலம் 3 தவணைகளாக 6000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்று இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு, கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தமிழக வேளாண் முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி விளக்கம் அளித்துள்ளார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

கிசான் திட்டத்தில் விவசாய நிலம் வைத்துள்ள வீட்டில் ஒருவர் மட்டுமே பயன்பெறலாம். மார்ச் மாதம் வரை ஒழுங்காக செயல்பட்டு வந்த திட்டத்தில் அதன் பிறகு அதாவது ஜூன், ஜூலை மாதங்களில் அதிகளவு முறைகேடுகள் நடைபெற்றது கண்டறியப்பட்டு உள்ளது. அதாவது மார்ச் மாதம் வரை இத்திட்டத்தில் 39 லட்சமாக இருந்த பயனாளர்கள் எண்ணிக்கை, ஆகஸ்ட் மாதத்தில் 45 லட்சமாக மாறியது. அதாவது 6 லட்சம் பேர் புதிய பயனாளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

கள்ளிக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், வேலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் முறைகேடுகள் நடைபெற்று உள்ளன. தனியார் கணினி மையங்கள் விவசாயிகளின் ஆதார் உள்ளிட்ட விபரங்களை கொரோனா நிவாரணம் பெற்றுத் தருவதாக பெற்று இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளன. ஆகஸ்ட் 24ம் தேதி சிபிசிஐடி இந்த விசாரணையை கையில் எடுத்தது. அதை தொடர்ந்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுவரை 110 கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

எல்லை துப்பாக்கிச் சூட்டிற்கு நாங்கள் காரணம் இல்லை – இந்திய ராணுவம் மறுப்பு!!

முறைகேடு செய்ததில் கணினி மையங்களுடன், இடைத்தரகர்கள் இணைந்து செயல்பட்டு உள்ளனர். இதுவரை 32 கோடி ரூபாய் பணம் திரும்ப பெறப்பட்டுள்ளது. மீதி பணம் 45 நாட்களில் திரும்ப பெறப்படும். இதில் இருந்து யாரும் தப்ப முடியாது. முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். கிசான் முறைகேட்டில் 80 ஒப்பந்த பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 18க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில் 34 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here