Thursday, May 2, 2024

தங்கத்தின் விலை ஏறுது…குறையுது – இன்று சவரனுக்கு 225 ரூபாய் குறைந்தது!!

Must Read

நேற்று அதிகரித்திருந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

தங்கத்தின் தேவை:

கொரோனா பொது முடக்ககாலத்தால் தங்கத்தின் விலையில் பல ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகின்றது. பலரும் தங்கத்தை பாதுகாப்பான முதலீடு என்று கருதி முதலீடு செய்ததால் தங்கத்தின் தேவை அதிகரித்தது. இந்த காரணங்களால் தங்கத்தின் விலை அதிகரித்தது.

கடந்த ஜூன் மாதம் 7 ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு 43,328 ரூபாய் என்று விற்கப்பட்டது. இது தங்க வரலாற்றில் அதிகமான விலை ஆகும். இந்த தங்க விலை நிலவரங்களை பார்த்து மக்கள் ஸ்தம்பித்து போயினர்.

விசேஷங்களுக்கு நகை வாங்க வேண்டும் என்று நினைத்தவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகினர். ஆனால், கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதியில் இருந்து விலை நிலவரம் கொஞ்சம் கொஞ்சமாக சரிய தொடங்கியது. அதிலும், கடந்த வாரம் தங்கம் படிப்படியாக குறைந்து கொண்டு வந்தது. ஆனால், நேற்று திடிரென்று சவரனுக்கு 225 ரூபாய் உயர்ந்தது. மக்கள் இதனால் மிகுந்த கவலை அடைந்தனர்.

இன்றைய விலை:

ஆனால் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இன்று சென்னையில் ஆபரண தங்கம் 104 ரூபாய் குறைந்து 39,392 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிராமுக்கு 13 ரூபாய் குறைந்து 4,924 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி விலை இன்று கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து 71 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்படி ஏற்ற இறக்கங்கங்களுடன் தங்கத்தை விலை மாறி வருவதால் மக்கள் குழப்பத்திலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும்  ஜூன் 2ம் தேதி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -