Saturday, May 25, 2024

ஓணம் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை – தடுப்பு நடவடிக்கைகளுடன் கொண்டாட அறிவுறுத்தல்!!

Must Read

ஓணம் பண்டிகையை முன்னிட்டு 31 ஆம் தேதி சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓணம் பண்டிகை:

கேரளா மாநிலத்தில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை “ஓணம்” . வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி அந்த பண்டிகை கொண்டாடப்படிருக்கிறது. இதனால் சென்னை, கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

thiruonam festival celebrations
thiruonam festival celebrations

வரும் 31 ஆம் தேதி திங்கள்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், அதற்கு பதிலாக அரசுத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு சனிக்கிழமையான செப்டம்பர் 12 ஆம் தேதி பணிகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அறிவுறுத்தல்:

இதனை சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி.சீதாலட்சுமி அறிவித்துள்ளார் கூடுதலாக, ஓணம் பண்டிகையை தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கொண்டாட வேண்டும் என்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல், கூட்டம் கூடாமல் இருத்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!

இப்படி மற்ற அனைவர்க்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டாலும்,கருவூலம் மற்றும் கருவுலசார்நிலை துறை அதிகாரிகளுக்கு விடுமுறை கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எப்போதும் போல் அலுவலகத்திற்கு வந்து தங்கள் பணிகளை பார்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான chennai.tn.nic.com இல் வெளியிட்டுள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

KKR vs SRH இறுதிப்போட்டியில் மழைக்கு வாய்ப்பு.. வெளியான வானிலை ரிப்போர்ட்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொல்கத்தா நைட்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -