மட்டன் அசைவ பிரியர்களின் ஒரு பிடித்தமான உணவு. அசைவ உணவுகளில் மட்டனில் தான் அதிக சத்துக்கள் உள்ளன. உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்துகிறது. கருத்தரிப்பதில் பிரச்சனை உள்ள பெண்கள் மட்டன் சாப்பிடலாம். இப்பொது மட்டனை வைத்து சூப்பரான கிரேவி எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மட்டன் 1/2 கி
- பெரிய வெங்காயம் – 2
- தக்காளி – 2
- பச்சைமிளகாய் – 3
- சின்ன வெங்காயம் 1/4 கி
- மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
- மல்லித்தூள் 1 தேக்கரண்டி
- கரம் மசாலா 1 தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு விழுது
- சீரகம் 1 தேக்கரண்டி
- மிளகு 1 தேக்கரண்டி
- எண்ணெய்
- உப்பு தேவையான அளவு.
செய்முறை
முதலில் மட்டனை நன்கு கழுவி மஞ்சள்தூள் சேர்த்து மட்டன் முழுகும்வரை தண்ணீர் சேர்த்து குக்கரில் 4 விசில் வரும் வரை வைக்கவும். பின்பு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயத்தை நறுக்காமல் முழுதாக சேர்த்து வறுக்கவும். நன்கு வதங்கியதும் அதில் சோம்பு, மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்.
அதன்பின் மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும் அதை இறக்கி தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். பின் கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் பச்சைமிளகாயை சேர்த்து வதங்கியதும் பெரிய வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் பொன்நிறமாக வந்ததும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது உப்பு சேர்த்துக்கொள்ளவும். (குறிப்பு: உப்பு சேர்த்தால் தக்காளி நன்கு வதங்கும்)
பிறகு இஞ்சிபூண்டு விழுதை சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும். இப்பொழுது அதில் மட்டனை சேர்க்கவும். நன்கு வதங்கியதும் அதில் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து கிளறவும் இப்பொது தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். 10 நிமிடம் கழித்து இறங்கினால் மட்டன் கிரேவி தயார். இதனை இட்லி, சப்பாத்தி, தோசைக்கு வைத்து சாப்பிட்டால் சுவை அள்ளும்.