ஐசிசி சார்பாக ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கு பெற்றுள்ள இந்த தொடரில், தற்போது வரை அனைத்து அணிகளும் தலா 3 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன. இதன் வெற்றி தோல்வி அடிப்படையில், புள்ளிப் பட்டியல் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த புள்ளிப்பட்டியலில் லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் தான் அரையிறுதிக்கும் முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது, 3 போட்டிகளையும் வென்றுள்ள இந்தியா (+1.821) மற்றும் நியூசிலாந்து (+1.604) அணிகள் தலா 6 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடத்தைத் தக்க வைத்துள்ளன. 2 போட்டிகளை வென்ற தென் ஆப்பிரிக்கா (+1.385) மற்றும் பாகிஸ்தான் (-0.137) அணிகள் தலா 4 புள்ளிகளுடன் 3 மற்றும் 4 வது இடத்தில் உள்ளன. இவர்களை தொடர்ந்து, ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் 5 முதல் 9 வது வரையிலான இடத்தை பிடித்துள்ளனர். இதுவரை ஒரு போட்டியையும் வெல்லாத இலங்கை அணி கடைசி இடத்தில் உள்ளது.