உத்தரகாண்ட் மாநிலத்திற்கு வெள்ளநிவாரண பணிகள் எவ்வாறு உள்ளது என்று பார்க்க சென்ற வடமாநில MLA தடுக்கிவிழுந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
வெள்ளப்பாதிப்பு:
கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் வெள்ளம் அதிகமாக உள்ளது, அதனால் மக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படியாக இருக்க தர்ச்சுலா என்ற பகுதிக்கு சென்றுள்ளார் அம்மாநில காங்கிரஸ் MLA ஹரிஷ் தாமி.
அவர் கடந்த வியாழக்கிழமை அந்த பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு இருந்த வழுக்களான பகுதியை இவர் கவனிக்காமல் சென்றுள்ளார்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
#WATCH Uttarakhand: Congress MLA Harish Dhami had a narrow escape after he slipped while crossing a flooded rivulet in Dharchula area of Pithoragarh. He was rescued by party workers & supporters accompanying him. (30.07.2020) pic.twitter.com/9pZDHSd30T
— ANI (@ANI) July 31, 2020
அங்கு கூடுதலாக, ஒரு ஓடை போல் தண்ணீர் பாய்ந்துள்ளது. அவர் எதையுமே கவனிக்காமல், சென்றதால், வழுக்கி பேலன்ஸ் இழந்துள்ளார். இது அங்கு இருந்த நிருபர்களின் கேமராவில் பதிவாகியுள்ளது. இவர் தடுமாறவும், அங்கு இருந்த பாதுகாவலர்கள், மருத்துவர்கள் மற்றும் கிராமத்தினர் உடனடியாக சிகிச்சை அளித்து, அவரை காப்பாற்றி உள்ளனர்.
சிறு சிறு காயங்கள்:
அவருக்கு இதனால் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது என்றும் காப்பாற்றியவர்கள் தெரிவித்தனர். கமெராவில் பதிவான இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
**நெட்பிளிக்ஸ் பிரபல தொடர் ‘மனி ஹெய்ஸ்ட்’ – இறுதி சீசன் ரிலீஸ் அறிவிப்பு!!**
இது குறித்து ஹரிஷ் தாமி கூறியதாவது ” எனக்கு சற்று வழுக்கி விட்டது. என்னால், பேலன்ஸ் செய்ய முடியவில்லை. பின்பு, என்னைச்சுற்றி இருந்தவர்கள் தான் காப்பாற்றினார்கள். சிறு சிறு காயங்களோடு நான் தப்பித்து விட்டேன். “