Saturday, May 4, 2024

வைட்டமின் குறைபாட்டால் ஏற்படும் விளைவுகள் – உஷாரா இருந்துக்கோங்க மக்களே!!

Must Read

உடலில் வைட்டமின் குறைபாடு தற்போதைய உலகில் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.இதனால் உடலில் பல நோய்கள் ஏற்படுகிறது.

வைட்டமின் குறைபாடு காட்டும் அறிகுறிகள்:

நம் உடலில் ஏற்படும் ஒரு சில அறிகுறிகளை வைத்தே வைட்டமின் குறைபாட்டை நாம் அறியலாம்.வைட்டமின் குறைபாடு காட்டும் அறிகுறிகள் நம் உடலில் சில அறிகுறிகளை காட்டும், இப்பொது அதன் தீர்வுகளைக் காண்போம்.

கால்சியம்

உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் அதன் அடர்த்தி சரியாக இல்லை எனில் எலும்பு மூட்டுகளில் சிறிய சத்தம் கேட்க நேரிடலாம்.
தீர்வு
இதற்கு கால்சியம் சத்து நிறைந்துள்ள உணவுகளான பால், தயிர், மீன், பன்னீர், கீரை போன்றவற்றை சாப்பிட கால்சியம் குறைபாடு நீங்கும்.

வைட்டமின் C

பல் தேய்க்கும்போதும், பழங்களை கடித்து உண்ணும்போதும் இரத்தம் கசிந்தாலும், நாக்கில் வெடிப்பு, புண்கள் ஏற்பட்டாலோ உடலில் வைட்டமின் C குறைவாக உள்ளதை காட்டும் அறிகுறிகள். உடலில் வைட்டமின் C குறைந்தால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும்.
தீர்வு:
இதற்கு நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா, பப்பாளி போன்ற பழங்களை சாப்பிடவேண்டும்.

இரும்புச் சத்து

தற்போது பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் சத்து குறைபாடு இது.உதட்டின் சிகப்பு நிறம் குறைவது,முகம் வெளுத்து காணப்படுவது போன்றவை உடலில் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளதை காட்டும்.
தீர்வு
ஆகவே முருங்கைக்கீரை, பீட்ரூட், ஆட்டு ஈரல், ஆப்பிள் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடவேண்டும்.

வைட்டமின் B7

முடி உதிர்தல், நகம் உடைதல் , தோல் உரிதல் போன்றவை வைட்டமின் B7 குறைவை காட்டும்.
தீர்வு
முட்டை, மீன், பாதாம், வாழைப்பழம், வேர்க்கடலை போன்ற உணவுகளில் வைட்டமின் B7 சத்துக்கள் நிறைந்துள்ளது.

வைட்டமின் B குறைபாடும் தீர்வும்:

பாத வெடிப்பு, கண்கள் சிவப்பாக இருத்தல் போன்றவை சத்து குறைப்பாட்டை காட்டும். இதற்கு காய்கறிகள் , பழங்கள், கீரை வகைகள் போன்றவற்றை சாப்பிடவேண்டும்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -