ஊரடங்கு காலத்தில் 7 ஆயிரம் மாணவிகள் கர்ப்பம் – அதிர்ச்சி தகவல்!!

0

மலாவியின் மங்கோச்சி மாவட்டத்தில் 7,000 க்கும் மேற்பட்ட பதின்பருவ பெண்கள் கர்ப்பமாகிவிட்டதாக அப்பகுதி கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

டீனேஜ் பெண்கள் கர்ப்பம்..!

தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவி, அங்கு கொரோனா பரவல் தொடங்குவதற்கு முன்பே பள்ளிகளை மூடுவதற்கான உத்தரவை பிறப்பித்தது. மலாவி நாட்டில் இதுவரை 3,700 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க நான்கு மாதங்களுக்கு முன்பு பள்ளிகளை மூடுமாறு நாட்டின் அரசாங்கம் உத்தரவிட்டது.

உள்ளூர் ஆன்லைன் செய்தி தளத்துடன் பேசிய நயாசா டைம்ஸ், மாவட்டத்திற்கான இளைஞர் நட்பு சுகாதார சேவைகள் ஒருங்கிணைப்பாளர் பீட்டர் மாலிபா, கர்ப்பிணிப் பெண்களில் 166 பேர் 10 மற்றும் 14 வயதுடையவர்கள் என்று தெரிவித்தார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

மார்ச் மாதம் பள்ளிகளை மூட மலாவி அரசு உத்தரவிட்டது. கொரோனா தொற்றுநோய், அந்த நாட்டின் இளம் பெண்களின் வாழ்க்கையை மோசமாக பாதித்துள்ளது, மேலும் இந்த காலகட்டத்தில் பாலின அடிப்படையிலான வன்முறை, தாக்குதல், துஷ்பிரயோகங்கள் உள்ளிட்டவை அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் முதல் முறையாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நாய் உயிரிழப்பு!!

கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மூன்று மாதங்களில், கென்யாவை சேர்ந்த 152,000 பதின்பருவ பெண்கள் கர்ப்பமாகிவிட்டனர், இது சராசரியில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிழக்கு ஆபிரிக்க நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, ஒரு மாவட்டத்தில், இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து சுமார் 4,000 டீனேஜ் பெண்கள் கர்ப்பமாகிவிட்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வயது குறைந்த சிறுமிகளின் நெருங்கிய உறவினர்கள்தான் கர்ப்பத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here