Monday, May 6, 2024

இங்கிலாந்து – அயர்லாந்து அணிகளுக்கு ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் – இன்று துவங்குகிறது!!

Must Read

இன்று இங்கிலாந்து – அயர்லாந்து ஆகிய ரெண்டு கிரிக்கெட் அணிகளுக்கும் நடக்க உள்ள மூன்று ஒரு நாள் தொடர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான நாளாக மாற உள்ளது.

கொரோனா பாதிப்பு:

கடந்த சில மாதங்களாக பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனாவால் எந்த விளையாட்டு போட்டிகளும் நடத்த படவில்லை. ஆனால், தற்போது இங்கிலாந்து – அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு சூப்பர் லீக் மூன்று நாட்களுக்கு ஒரு நாள் போட்டிகள் நடக்க உள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், இந்த போட்டி ஒரு சூப்பர் லீக் போட்டி ஆகும்.

அது மட்டும் அல்லாமல், கொரோனா பொது முடக்கத்திற்கு பின் நடக்க உள்ள முதல் போட்டி ஆகும். இதனால், கூடுதலான கவனத்தை இந்த போட்டி தொடர் பெற்று உள்ளது. இதற்கு முன் மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிகள் எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல், முடிவடைந்தது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முடித்துவிட்டதால், 14 பேர் கொண்ட அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், ஜாஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோருக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக, ஜானி பையர்ஸ்டவ், மொயீன் அலி மற்றும் இயன் மார்கன் ஆகியோருக்கு வாய்ப்புகள் வழங்க படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அயர்லாந்து அணி:

அயர்லாந்து அணியில் ஆல்-ரவுண்டர் கர்டிஸ் காம்பெர் விளையாட உள்ளார். டி 20 தொடரின் போது இரண்டு அரைசதங்களை அடித்த பேட்ஸ்மேன் ஹாரி டெக்டர் இந்த ஒரு நாள் போட்டியில் அறிமுகமாக உள்ளார். இந்த போட்டி குறித்து இயன் மார்கன் கூறியதாவது ” இந்த போட்டி மிகுந்த சுவாரசியம் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அயர்லாந்து ஒரு திறமையான அணி, அவர்களுடன் விளையாட ஆவலாக உள்ளோம்” என்று தெரிவித்து உள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -