Thursday, April 25, 2024

கிஷோர் கே சுவாமி சர்ச்சை!! போலீஸுக்கு வலுக்கும் எதிர்ப்பு!!

Must Read

“மை டியர் ஆம்னி பஸ் ஆண்டி.. நீ அடிச்சு தூக்கினாலும் சரி.. தூக்கிட்டு அடிச்சாலும் சரி.. என்னை ஒன்னும் புடுங்க முடியாது” என்று பெண் பத்திரிகையாளரை பற்றி அநாகரீக பதிவு போட்ட கிஷோர் கே சுவாமியை போலீசார் கைது செய்தனர்.

யார் இவர்

கிஷோர் கே சுவாமி. இவர் ஒரு பாஜக ஆதரவாளர். அதை விட மற்றவர்களை மட்டம் தட்டி டிவீட் போஸ்ட் போடுபவர் என்றும் சொல்லலாம்.

வாழ்த்துக்கள் ⇒⇒⇒ தன்னலமற்ற வில்லனுக்குப் பிறந்தநாள்!!

குறிப்பாக பெண்களுக்கு எதிரான பதிவுகளே அதிகம். அதிலும் பெண் பத்திரிகையாளர்கள் என்றால் இவரது பதிவுகள் அனைத்துமே மத சகிப்புதன்மை அற்ற பதிவுகளாகவே இருக்கும்.

தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு எதிராகவும் அவதூறு பரப்பும் வகையிலும் இப்படியே பதிவுகளை போட்டு வந்ததால், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக கடந்த வருடம் போலீஸ் கமிஷனரிடம் புகார் கூட அளிக்கப்பட்டது.

சைபர் கிரைமில் புகார்

கிஷோர் கே சுவாமி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் சைபர் கிரைம் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, கைதும் செய்து, சைதாப்பேட்டை கோர்ட்டிலும் ஆஜர்படுத்தினர். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே ஜாமீன் வாங்கி கொண்டு வெளியே வந்து விட்டார்.

மீண்டும் ஒரு மோசமான பதிவு

நேற்று காலை கிஷோர் கே சுவாமி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ஒரு பெண் பத்திரிகையாளரை மிக மிக கேவலமாகவும், கொஞ்சம்கூட நாகரீகம் இல்லாமலும், அருவறுப்பாகவும் பேசி ஒரு பதிவை போட்டிருந்தார்.

தலைமறைவு

இது சம்பந்தமாக மறுபடியும் கமிஷனர் அலுவலகத்தில் பெண் பத்திரிகையாளர் புகார் தந்ததால் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரும் விசாரணை நடத்தி கிஷோர் கே.சுவாமி மீது வழக்கு பதிவு செய்து, கே.சுவாமியை தேடி அவர் வீட்டிற்கு போலீசார் சென்ற போது அவர் வீட்டில் இல்லை.

அதனால், அவரது செல்போன் சிக்னலை வைத்து எங்கிருக்கிறார் என்று டிரேஸ் செய்த போது, ஒரு தனியார் யூ-டியூப் சேனலில் இருந்த கிஷோர் கே.சுவாமியை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.

வலை தளத்தில் டிரெண்டிங்

இவர் கைது விவகாரம் இரவு நேரங்களிலும் சோஷியல் மீடியாவில் வலம் வந்தபடியே இருந்தது.. ஆனால், வழக்கம்போல், கைதான சிறிது நேரத்தில் சொந்த ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.

விசாரணையின்போது மட்டும் நேரில் ஆஜரானால் போதும் என்று கூறி போலீஸார் விடுவித்துள்ளதாக தெரிகிறது.

போலீஸுக்கு கண்டனம்

கைது செய்த சில மணி நேரத்தில் இவர் விடுதலை ஆனதால், பத்திரிகையாளர்கள் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.. இதை கண்டித்து ட்விட்டரில் #shameonchennaipolice என்ற ஹேஷ் டேக்கில் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். கிஷோர் கே சுவாமி மட்டும் எப்படி ஒவ்வொரு முறையும் கைதாகி வெளியே வருகிறார் என்பது தமிழக மக்களுக்கு புரியாத புதிர் தான்!!

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -