தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோக்களுக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இப்படத்தில் நடிக்கும் பொழுது இருவருக்குள் காதல் மலர்ந்ததாக சோசியல் மீடியாவில் பலரும் பேசி வந்தனர். சமீபத்தில் விஜய் தன்னுடைய காதலியின் புகைப்படத்தை விரைவில் வெளியிடுவேன் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் சமந்தா சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு எடுக்கும் போட்டோக்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது அவர் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதே போல் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அப்ப இருவரும் ஒன்றாக தான் நீச்சல் குளத்தில் குளிக்கிறார்களா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கண்டபடி திட்டிய பாலா.., காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட லைலா.., அப்படி என்னதான் நடந்துச்சு?