Saturday, April 27, 2024

எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் பாத்தீங்களா?? என கூறிய யானை !!

Must Read

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற சிவபெருமான் ஐராவதக் காட்சி பூஜைக்காக அங்குள்ள யானை முதன்முறையாக உடல் முழுவதும் விபூதி மற்றும் அரிசிமாவு கலந்து பூசப்பட்டதால் வெள்ளை யானையாகக் காட்சி தந்து கோவிலுக்குள் வலம் வந்தது.

திருச்செந்தூரில் ஐதீக நிகழ்ச்சி

கொரோனா ஊரடங்கால் தமிழகத்தின் அனைத்து வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டலும் வழக்கமான பூஜைகள் தொடர்ந்து நடத்தப்பட்டுதான் வருகின்றன.

ஓ! அப்படியா!! ⇒⇒ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் விரைவில் – தமிழக அரசு தேர்வு இயக்கம்..!

அதன்படி ஆடி மாதம் ஸ்வாதி நட்சத்திரத்தன்று 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திருக்கயிலாய மலையில் சிவபெருமான் ஐராவதம் என்கிற வெள்ளை யானைமீது அமர்ந்து காட்சி கொடுத்ததாக ஐதீக நிகழ்ச்சி திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்தது.

வெள்ளை யானை

ஆண்டுதோறும் உடல் முழுவதும் திருநீறு மற்றும் அரிசி மாவு ஆகியவற்றை கலந்து பூசப்பட்ட வெள்ளை யானை முன் செல்ல, சுந்தரமூர்த்தி நாயனார் பல்லக்கில் எழுந்தருளும் வீதி உலா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கொரோனாவால் சுவாமி புறப்பாடு ரத்து செய்யப்பட்டது.

அதற்கு பதிலாக வெள்ளை யானை முன் செல்ல கோவிலின் உள்ளே இரண்டாவது பிரகாரமான ஐராவத மண்டபத்தில் சுவாமி சுந்தரமூர்த்தி நாயனார் சிறிய பல்லக்கிலும், சுவாமி சேரமான்பெருமான் சிறிய கேடயச் சப்பரத்திலும் எழுந்தருளும் பல்லக்கு உலா நடைபெற்றது.

வணக்கம் செலுத்திய யானை

கோவிலுக்குள் செல்வதற்கு முன்பாக யானை அழகாக மண்டியிட்டு வணங்கி உள்ளே சென்றது. இந்நிகழ்ச்சி கோயில் உள்பிரகாரத்தில் நடந்ததால் கோயில் அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்றனர்.

வெள்ளை யானை தெய்வானை

இந்த நிகழ்ச்சிக்காக யானையின் உடலில் பூசுவதற்கு 10 கிலோ திருநீறு 6 கிலோ அரிசி மாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து பாகன்கள் பயன்படுத்தியதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

முதன்முறையாக 21 வயதான தெய்வானை என்ற யானை தான் வெள்ளை யானையாக மாற்றப்பட்டு கோவிலுக்குள் அழைத்து செல்லப்பட்டது.

கொரோனா ஊரடங்கால் ‘எப்படி இருந்த நான் எப்படி மாறியிருக்கிறேன் பாருங்கள்’ என்பது போல யானை கோவிலுக்குள் வளம் வருவதை கண்ட அனைவரும் ஆச்சர்யத்துடன் வணங்கினர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -