Tuesday, April 30, 2024

விண்வெளியில் புதிய சிறுகோள் கண்டுபிடிப்பு – சூரத் மாணவிகள் அசத்தல்!!

Must Read

குஜராத் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இருவர் செவ்வாய் கிரகத்தில் உள்ள கோள் ஒன்றை கண்டுபிடித்து உள்ளது மக்களிடையே ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

” செவ்வாயில் புதிய சிறுகோள்”

அகில இந்திய விண்வெளி தேடல் 2020 போட்டி நடந்தது, அதில் 175 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இந்த போட்டி அமெரிக்காவின் டெக்சாஸின் ஹார்டின் சிம்மன்ஸ் பல்கலைக்கழகத்துடன் ஸ்பேஸ் / இந்தியா, ஸ்பேஸ் / சூரத் ஆகியோரால் நடத்தப்பட்டது. அதில் சூரத் மாவட்டத்தை சேர்ந்த, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகளான ராதிகா லக்கானி மற்றும் வைதேஷி வெகார்யா பங்கேற்று உள்ளனர்.

Indian schoolgirls discover asteroid moving toward Earth ...

அவர்கள் இருவரும், செவ்வாய் கிரகத்தை சுற்றி உள்ள இடத்தில் Near Earth Object (NEO) என்ற சிறுகோளை கண்டுபிடித்து உள்ளனர். அந்த, சிறுகோளிற்கு HLV 2514 என்று பெயரிட்டு உள்ளனர். இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தி உள்ளதால், அவர்கள் இருவரும் சர்வதேச வானியல் தேடல் அமைப்பில் பணியாற்ற தேர்ந்தெடுக்கபட்டு உள்ளனர்.

கல்வியாளர் தெரிவித்தது:

இது குறித்து ஸ்பேஸ் அமைப்பில் மூத்த கல்வியாளரும், வானியலாளருமான ஆகாஷ் திவேதி கூறியதாவது ” பல மாணவர்கள் இது போன்ற கண்டுபிடிப்பை செய்கின்றனர், ஆனால், இவர்கள் கண்டுபிடித்து இருக்கும் இந்த சிறுகோள், தனது வட்டத்தினை மாற்றக்கூடியது மற்றும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு வேறுபடக்கூடியது. இந்த சிறுகோள் 10 லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு பூமியை வந்து அடையும். இந்த மாணவிகள் இருவரும் அட்வான்ஸ்ட் தொழிநுட்பத்தை பயன்படுத்தி கண்டுபிடித்து உள்ளனர். இவர்களுக்கு, மேலும் பயிற்சிகள் அளிக்க படும், பின்பு, இவர்களுக்கு இந்த சிறுகோள் குறித்த பான் ஸ்டார்ஸ் எடுத்த புகைப்படங்களை வழங்குவோம்.

அரசுப்பள்ளி மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்கள் – மாநில முதல்வர் அறிவிப்பு!!

Radhika and Vaidehi
Radhika and Vaidehi

பான் ஸ்டார்ஸ் எடுக்கும் புகைப்படும் மிகவும் துல்லியதாகவும், அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கப்பட்டதாகும்” என்று தெரிவித்து உள்ளார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

ஐ.ஏ.எஸ்.சி இயக்குனர் ஜே பேட்ரிக் மில்லர், இந்த மாணவிகளின் கண்டுபிடிப்பை மின்னஞ்சல் மூலமாக ஸ்பெஸ் அமைப்பிற்கு அனுப்பி உள்ளார்.

மாணவிகள் கருத்து:

இது குறித்து அந்த மாணவிகள் தெரிவித்ததாவது “நாங்கள் எங்கள் பழியை மட்டும் பெருமை படுத்தவில்லை, எங்கள் பெற்றோர்களையும் தான்.நாங்கள் இருவரும் அடுத்ததாக, விண்வெளி ஆராய்ச்சி குறித்து படிக்க உள்ளோம். இது போன்று இன்னும் 63 சிறுகோள்கள் உள்ளது அத்தனையும் கண்டுபிடிப்போம்” என்று கூறியுள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

36 வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. வெளியான முக்கிய தகவல்!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி, புழல்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -