Monday, April 29, 2024

திருமணங்களுக்காக கடத்தப்படும் பெண்கள் – இந்தோனேசியாவில் சர்ச்சைக்குரிய வழக்கம்

Must Read

இந்தோனேசியாவில் உள்ள சும்பா என்ற தீவில் மணப்பெண்களைக் கடத்துதல் என்ற சர்ச்சைக்குரிய வழக்கம் ஒன்று நடந்தேறி வருகிறது. அவ்வாறு ஒரு பெண் கடத்தப்படும் காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெண் கடத்தப்படுத்தல்

ஒரு பெண் இரு அரசு அதிகாரிகளால், அவரது நிறுவனத் திட்டத்தின் செலவை தெரிந்து கொள்ள அழைக்க பட்டிருக்கிறார். சிறுது தயக்கத்துடன் சென்ற அப்பெண்ணிடம், நிறுவன சந்திப்பு வேறு இடத்தில் என்று கூறப்பட்டிருக்கிறது.

பிறகு, அங்கு செல்ல காரில் ஏறும்படி கூறியுள்ளனர் அதிகாரிகள். அதனை மறுத்து, தனது இரு சக்கர வாகனத்தில் வருகிறேன் என்று கூறிய அப்பெண்ணை , சிலர் கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர்.

திருமணம் செய்ய வற்புறுத்தல்

அப்பெண் அவரது தந்தையின் தூரத்து உறவினர் வீட்டுக்கு கடத்தி செல்லபட்டு, அங்கு அவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பெண் எவ்வளவு கெஞ்சியும், அவர்கள் அப்பெண்ணை விடவில்லை.

ஆறுநாட்கள் தனியறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் அப்பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், கடத்தி சென்ற நபரின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தாருடன் அப்பெண்ணை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டதன் பேரில், அப்பெண் விட்டுவைக்கப்பட்டுள்ளார்.

தடை செய்யப்பட வேண்டும்

மணப்பெண்களை கடத்துவது இந்தோனேசியாவில் உள்ள சும்பா என்ற தீவில் வழக்கமாகவே உள்ளது. பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும் குழுக்கள், இச்செயல்முறை தடை செய்யப்பட வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க ⇒⇒ கொரோனா நெருக்கடியிலும் ஓயாத பாலியல் தாக்குதல்!!

இரு பெண்கள் கடத்தப்படும் காணொளி இணையத்தளத்தில் வைரலாகியதால், இந்தோனேசியா அரசு முன் வந்து சில நடவடிக்கைகளை எடுத்து, இதனை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இது குறித்து பெண்கள் அதிகார மந்திரியான பிண்டங் புஷ்பயோகா, இச்செயல் பெண்களின் உரிமைகளுக்கு எதிரான குற்றம் என்றும், அதனை தடுக்க அரசு பெரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் உறுதியளித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -