Wednesday, March 27, 2024

சர்ச்சை யூ ட்யூபர் மாரிதாஸ் மீது புகார் – 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!!

Must Read

தனியார் தொலைக்காட்சியை பற்றி தவறான வதந்தியை ஈமெயில் மூலம் பரப்பி வருகிறார் என்று யூ ட்யூபர்மாரிதாஸ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

தவறான அவதூறு பரப்புதல்:

யூ ட்யூபர் மாரிதாஸ் தனக்கு என்று யூ டிப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் கடந்த சில நாட்களாக ஒரு தனியார் தொலைக்காட்சியை பற்றி அவதூறு பரப்பும் விதமாக பேசி வந்தார். இதனால், அந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனர், இவர் மீது காவல்துறையில் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.

பாபிஜி அப்பளம் கொரோனாவை ஒழிக்கும் – மத்திய அமைச்சர் பேச்சுக்கு மக்கள் கண்டனம்..!

Maridass youtuber
Maridass youtuber

அதில் அவர் ” யூ ட்யூபர் மாரிதாஸ் தன் மீதும் தன் தொலைக்காட்சி பற்றியும் தவறாக மக்களிடையே ஒரு போலி ஈமெயில் மூலமாக பரப்பி வருகிறார், என்று புகார் ஒன்றை அளித்து இருந்தார். போலீசாரும் வழக்கு பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுத்து உள்ளனர். இந்த புகார் சென்னை நகர குற்றவியல் காவல்துறையினரிடம் தெரிவிக்க பட்டது.

5 பிரிவுகளில் வழக்கு:

யூ ட்யூபர் மாரிதாஸ் மீது போலீசார் 5 பிரிவுகளில், அதாவது ஆவணங்களை பொய்யாக காட்டி கூறுவது, ஒருவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கூறுவது, பொய்யான செய்தியை உண்மை என்பது போல் காட்டுவது, பொய்யான ஆவணம் தயாரிப்பது போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இதற்கு மாரிதாஸ் “எனக்கு வந்த ஈமெயில் அதை தான் நான் அனைவருக்கும் அனுப்பினேன். எனக்கு அனுப்பியவர்களை போலீஸ் தான் கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறி உள்ளார். இவர் மத அடிப்படை மற்றும் பல ஊடகங்களின் மீதும் அவதூறு பரப்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மீண்டும் கேப்டனாகும் பாபர் அசாம்.., பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி முடிவு!!!

நடப்பு ஆண்டுக்கான டி20 உலக கோப்பை தொடர் ஜூன் 4ம் தேதி முதல் 30ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்நிலையில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -