தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். எப்படிப்பட்ட சவாலான கதாபாத்திரத்தை கொடுத்தாலும், அதை சிறப்பாக நடித்து கொடுப்பதில் இவர் கெட்டிக்காரர் என்பது நமக்கு தெரிந்த ஒன்று தான். மேலும் இவர் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்த தசரா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் இவர் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதியுடன் இணைந்து ”மாமன்னன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் நடிகர் பகத் பாசில் மற்றும் வடிவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூன் 23ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் நேற்று இதன் இசை வெளியீட்டு விழா நடந்துள்ளது.
பான் கார்டு இதற்கு மேல் செல்லாது?? இது தான் கடைசி வாய்ப்பு…, அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
இதில் படக்குழுவினர் மற்றும் பல திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் போனி கபூர் கீர்த்தி சுரேஷ் குறித்து கூறியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அதில் அவர் கூறியதாவது, ”நான் பார்த்ததிலேயே என் மனைவிக்கு பிறகு மிகவும் அழகான பெண் கீர்த்தி சுரேஷ் தான்” என கூறியுள்ளார். இவர் கூறியதை கேட்ட நெட்டிசன்கள் இதை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.