சந்திரமுகி 2 படத்தின் கதை இதானா? ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லீக்கான போட்டோ!!

0
சந்திரமுகி 2 படத்தின் கதை இதானா? ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லீக்கான போட்டோ!!
சந்திரமுகி 2 படத்தின் கதை இதானா? ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லீக்கான போட்டோ!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் P.வாசு. இவர் இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இப்படம் நடிகைக்கு அதிகம் முக்கியத்துவம் உள்ளது என்று தெரிந்தும் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் இப்படம் ரஜினியின் சினிமா கேரியரில் அதிக நாட்கள் தியேட்டரில் ஓடிய திரைப்படமாக அமைந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சொல்லப்போனால் ஒரு தியேட்டரில் 3 வருடங்கள் இந்த திரைப்படம் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை P.வாசு எடுத்து வருகிறார். இதில் ரஜினிக்கு பதிலாக ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். பொதுவாக ரஜினி அவரின் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க மாட்டார். அதனால் தான் இந்த படத்தில் ரஜினி அனுமதியுடன் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு புகைப்படம் இணையதளத்தில் லீக்காகி உள்ளது. அதாவது ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத் அரசர் உடையில் உள்ள புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

ஜூன் மாதத்திற்கான வங்கி விடுமுறை அட்டவணை வெளியீடு., ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு!!!

இதை வைத்து பார்க்கும் பொழுது சந்திரமுகியின் ஃப்ளாஷ் பேக் சீன்கள் தான் இடம்பெற இருக்கிறது என்று அப்பட்டமாக தெரிகிறது. மேலும் இந்த பார்ட் 2வில் வேட்டையன் ராஜாவை சந்திரமுகி எதற்கு கொல்ல துடிக்கிறாராள் என்பதை இதில் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் படத்தோட எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here