தமிழக அரசு ஊழியர்களுக்கு இனி தகுதி அடிப்படையில் தான் ஓய்வூதியம்?? வெளியான முக்கிய தகவல்!!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு இனி தகுதி அடிப்படையில் தான் ஓய்வூதியம்?? வெளியான முக்கிய தகவல்!!
தமிழக அரசு ஊழியர்களுக்கு இனி தகுதி அடிப்படையில் தான் ஓய்வூதியம்?? வெளியான முக்கிய தகவல்!!

தமிழக அரசானது, சமீபத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான அகவிலைப்படியை 38 %-திலிருந்து 42%-ஆக உயர்த்துவதாக அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பானது, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தாலும், பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பும் இவர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கிடையில், இந்த ஓய்வூதியம் வழங்குவதிலும் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றனர். அதாவது, தமிழக அரசு சார்பாக மாதந்தோறும் ரூ.1000 இல்லத்தரசிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், விதவை, ஆதரவற்றோர், கட்டிட வேலை பார்க்கும் பெண்கள், மீனவ, சிறு, குறு தொழிலில் வேலை பார்க்கும் பெண்கள் உள்ளிட்ட இல்லத்தரசிகள் மட்டுமே மாதந்தோறும் ரூ.1000 பெற தகுதியுடையவர்கள் என அரசு அறிவித்திருந்தது.

சந்திரமுகி 2 படத்தின் கதை இதானா? ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லீக்கான போட்டோ!!

இதே போல, சட்டப்பேரவையில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் தகுதி அடிப்படையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கோரிக்கைள் எழுந்து வருகின்றன. அதாவது, ஓய்வூதியத்தின் முக்கிய குறிக்கோள் என்பது அரசு ஊழியர்கள் பணி காலத்திற்கு பிறகு நிதி அடிப்படையில் பாதுகாப்பான சூழ்நிலையை பெறுவது தான். ஆனால், சட்டப்பேரவையில் உள்ள அரசு ஊழியர்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் செல்வந்தர்களாகவே உள்ள நிலையில், பணி ஓய்விற்கு பிறகு பாதுகாப்பான சூழ்நிலையை இவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் தான் தரும் என்பது அப்பாற்பட்டது. இதனால், அரசு மறுபரிசீலனை செய்து தகுதி அடிப்படையில் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here