தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கேரளாவைச் சேர்ந்த இயக்குனர் சுரேஷ் குமாரின் மகளான கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயம்’ என்ற தமிழ் சினிமா மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்புகளை அடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விக்ரம் ஆகியோருடன் ஜோடி போட்டார். குறிப்பாக, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘மகாநதி’ திரைப்படம் இவருக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. இப்படி சினிமாவில் பல சாதனைகளை செய்து வரும் கீர்த்தி சுரேஷின் வீட்டில் இருந்து ஒரு இயக்குனர் சினிமாவுக்கு அறிமுகமாகி இருக்கிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி…..,ரோஹித் ஷர்மா நாளை இங்கிலாந்து பயணம்?….,
அதாவது, கீர்த்தியின் சகோதரி ரேவதி சுரேஷ் ‘தேங்க் யூ’ என்ற குறும்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். முன்னதாக, ரேவதி தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் இயக்குனராக பணிபுரிந்து வரும் ப்ரியதர்ஷினியிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.