உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி…..,ரோஹித் ஷர்மா நாளை இங்கிலாந்து பயணம்?….,

0
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி.....,ரோஹித் ஷர்மா நாளை இங்கிலாந்து பயணம்?....,
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி.....,ரோஹித் ஷர்மா நாளை இங்கிலாந்து பயணம்?....,

இந்தியன் பிரீமியர் லீக் 2023 போட்டிகள் நாளை (மே 28) நடைபெற இருக்கும் இறுதி ஆட்டத்துடன் முடிவுக்கு வர இருக்கும் நிலையில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறது. அந்த வகையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி ஜூன் 7 ஆம் தேதி துவங்குகிறது.

இந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் வைத்து ஜூன் 11 ஆம் தேதி வரை நடத்தப்பட இருக்கிறது. இதில், வெற்றி பெறும் அணி ரூ. 13.23 கோடி தொகையை பரிசாகப் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படமாகும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலியின் வாழ்க்கை….,ரன்பீர் கபூர் நடிக்க இருப்பதாக தகவல்….,

இப்போது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே.எஸ்.பாரத், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், இஷான் கிஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த போட்டியில் பங்கேற்பதற்காக ரோஹித் ஷர்மா நாளை லண்டன் செல்ல இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here